விஜய்காந்த் கட்சியில் இணையும் அதிமுக,திமுக, பாஜக பிரமுகர்கள்
சென்னை:
பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 25,000 பேர் உள்படஏராளமானோர் நடிகர் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் விஜயகாந்த்தின் தேமுதிகவில் பல்வேறு கட்சியைச்சேர்ந்தவர்கள் இணைந்து வருகின்றனர்.சமீபத்தில் திருவொற்றியூர் நகராட்சி அதிமுக கவுன்சிலர் சுப்பிரமணி தேமுதிகவில்இணைந்தார். நீண்ட காலமாக அதிமுகவில் இருந்தவர் இவர்.
இந் நிலையில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக முன்னாள் எம்.பியும், அதிமுகசார்பில் தாரமங்கலம், வீரபாண்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகளில் இருமுறைஎம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அர்ச்சுனன் விஜயகாந்த்முன்னிலையில் தேமுதிகவில் இணைந்துள்ளார்.
இதேபோல சீர்காழி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியனும் விஜயகாந்த்கட்சியில் சேர்ந்தார்.
வட சென்னை மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் கார்மேகம் தலைமையில்நூற்றுக்கும் மேற்பட்டோர் தேமுதிகவில் இணைந்தனர்.
பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 25,000 பேரும் விஜயகாந்த்தைசந்தித்து தேமுதிகவில் இணைத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications