எதிர்கட்சி தலைவராக ஜெ அங்கீகரிக்கப்படுவாரா?
சென்னை:
சட்டசபை அதிமுக தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பானஅதிகாரப்பூர்வ கடிதத்தை சபாநாயகர் ஆவுடையப்பனை நேரில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பித்துரை, கருப்பசாமி உள்ளிட்டஅதிமுக குழு கொடுத்தது.
இந்தக் கடிதத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் பெற்றுக் கொண்டார்.பின்னர் ஆவுடையப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவைச் சேர்ந்தகுழுவினர் என்னிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதில், சட்டமன்ற கட்சித் தலைவராகஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதம்எனது ஆய்வில் உள்ளது என்றார்.
ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்படுவாரா என்றுஆவுடையப்பனிடம் கேட்டபோது, அக்கடிதம் எனது பரிசீலனையில் உள்ளது என்றுமட்டும் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
இதனால் எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் ஜெயலலிதாவை அங்கீகரிப்பாராஎன்பது இன்று தெரிய வரும்.
ஜெவுக்கு வைகோ, திருமா வாழ்த்து:
இந் நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவைமதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் அறிக்கை மூலம்வாழ்த்தியுள்ளார்.
சட்டசபை அதிமுக தலைவராக (எதிர்க்கட்சித் தலைவராக) ஜெயலலிதா நேற்று தேர்வுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை அவரது இல்லத்திற்குச் சென்றுவைகோ சந்தித்தார். இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சிறிது நேரம்பேசினர்.
இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுத்துள்ளசெய்திக் குறிப்பில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்று கடமையாற்றமுன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.
மக்களின் கட்டளையை ஏற்று பேரவைக்குச் செல்ல வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் விடுத்த கோரிக்கையை ஏற்று தனது முடிவை மாற்றிக் கொண்டஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
இதேபோல, அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான தண்டனையைக் குறைக்கசபாநாயகருக்குப் பரிந்துரைத்த முதல்வர் கருணாநிதிக்கும் அவர் நன்றிதெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications