6 அதிமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை பிரச்சினை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அமைச்சர்கள் பாண்டுரங்கன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட ஆறு அதிமுகஎம்.எல்.ஏக்கள் மீது காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் உரிமை மீறல் பிரச்சினைகொண்டு வந்தார். அதை உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப சபாநாயகர்ஆவுடையப்பன் அனுப்ப உத்தரவிட்டார்.

இன்று காலை சட்டசபை கூடியதும், வேலூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர்ஞானசேகரன் எழுந்து,

கடந்த 26ம் தேதி சபையில் நடந்த நிகழ்வுகள் என்னுடைய உரிமைகளையும்,காங்கிரஸ் உறுப்பினர்களின் உரிமைகளையும், முதல்வர் கருணாநிதியின்உரிமைகளையும் மீறிய செயல் என்பதை சுட்டிக் காட்டி உரிமை மீறல் புகார் ஒன்றைஅவைத் தலைவரிடம் கொடுத்திருக்கிறேன்.

அன்றைய தினம் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, அதிமகஉறுப்பினர்கள் அவரை பேச விடாமல் செய்து, உட்காருடா, உட்காருடா என்றுஒருமையில் மரியாதையில்லாமல் பேசி அவரை நோக்கி பாய்ந்து ஓடி வந்தபோதுஎல்லோரையும் தடுத்து நிறுத்தி பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முயன்றுகொண்டிருந்தேன்.

வீடியோவில் பார்த்தால் இது புரியும். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் பாண்டுரங்கன்,சி.வி.சண்முகம், கலைராஜன், ஆர். சின்னச்சாமி, சி.சின்னச்சாமி ஆகியோர் ஆகியோர்வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இருக்கை மீது ஏறி நன்று என்னையும்,காங்கிரஸ் உறுப்பினர்கள் கோவை தங்கம், விடியல் சேகர், சிவராஜ், அமரமூர்த்திஆகியோரை தாக்கினர்.

இந்தக் காட்சி தமிழக சட்டமன்றமா அல்லது கொலைக்களமா என்று மக்கள் கேட்கும்அளவுக்கு இருந்தது. சினிமா சண்டை போல காணப்பட்டது.

அனைத்து அதிமுக உறுப்பினர்களையும் சபாநாயகர் வெளியேற்றியபோதிலும்,சேகர்பாபு மீண்டும் அவைக்குள் ஓடி வந்து முதல்வர் அருகே நின்று கொண்டுமைக்கைப் பிடுங்கி முதல்வரை அடிக்க வந்தபோது அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், கருப்பசாமி பாண்டியனும் அருகே இருந்துமுதல்வரைக் காத்தார்கள்.

ஜெயலலிதா இப்போது எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.முன்பே அவர் எதிர்க்கட்சித் தலைவராக இந்த அவைக்கு வந்திருந்தால் முதல்வர்எதிரே உட்கார்ந்திருப்பார்.

ஜெயலலிதா எதிரே நிற்க பயந்து சேகர்பாபு இந்தப் பக்கமே வந்திருக்க மாட்டார்.முதல்வருக்குப் பாதுகாப்பாக இருந்திருக்கும்.

சட்டசபையில் இதுபோல தாக்குதல் நடத்திய அதிமுக உறுப்பினர்கள் சேகர்பாபு,கலைராஜன், சி.சின்னச்சாமி, ஆர். சின்னச்சாமி, பாண்டுரங்கன், சி.வி.சண்முகம்ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே இதைத் தடுத்த நிறுத்தவில்லை என்றால் புதைகுழியில்தான்எங்களைத் தேட வேண்டியது இருக்கும் என்றார் ஞானசேகரன்.

இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், இதில் உரிமை மீறல் இருப்பதாகதெரிகிறது. எனவே உரிமைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கிறேன், இத்துடன்இப்பிரச்சினை முடிந்தது என்று அறிவித்தார்.

பாதுகாப்பு கோரும் கூட்டணி கட்சிகள்:

இந் நிலையில் சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் அதிமுகவினரின்தாக்குதலிலிருந்து கூட்டணிக் கட்சியினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்என்று சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சிவபுண்ணியம் கோரிக்கைவிடுத்தார்.

சட்டசபையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை சிவபுண்ணியம் கொண்டுவந்தார். அவர் பேசுகையில், ஆலங்குடி தொகுதியில் வெற்றி பெற்ற உறுப்பினர்ராஜசேகரன் கடந்த 28ம் தேதி வடவாடு கிராமத்தில் நன்றி அறிவிப்புக் கூட்டத்திற்குஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர்வெங்கடாச்சலத்தின் மகன் தலைமையில் சிலர் சென்று கூட்டத்தினரை தாக்கியுள்ளனர்.கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.

இத்தாக்குதலில் 6 போலீஸார் காயமடைந்துள்ளனர். வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினரே வெளியில் நடமாட முடியாத நிலைஏற்பட்டுள்ளது. எனவே கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்புஅளிக்க வேண்டும் என்றார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எழுந்து, இந்த சம்பவத்தில்எங்களது கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் புஷ்பராஜும்காயமடைந்துள்ளார். கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபைக்கு உள்ளேயும்,வெளியேயும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை முளையிலேயேகிள்ளி எறிய வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து சபாநாயகர் ஆவுடையப்பன் பேசுகையில், சிவபுண்ணியம்கொடுத்த புகார் ஆய்வில் உள்ளது. நாளை அது எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

அடி வாங்குகிறோம்...

காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம் பேசுகையில்,

தேர்தல் தோல்வியை ஏற்க முடியாமல் சட்டசபையில் அதிமுக கலாட்டா செய்கிறது.எங்களை தாக்குகிறார்கள். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ்காரர்கள் அடிவாங்கும்நிலை உள்ளது. எங்களுக்கு சபாநாயகர் தான் பாதுகாப்பு தர வேண்டும்.

கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் எப்படி அடிக்கடி மாறினார்களோ, அதுபோல்இப்போது எதிர்க் கட்சித் தலைவரும் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கிறார்.

திமுகவினர் தாக்கினர்-அதிமுக புகார்:

இதற்கிடையே, மத்திய திமுக அமைச்சர் ரகுபதியும், புதுக்கோட்டை மாவட்டகாங்கிரஸ் தலைவர் புஷ்பராஜும், 20க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்துதன்னைத் தாக்கியதாக ஆலங்குடி தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வெங்கடாச்சலம் புகார் கூறியுள்ளார்.

தற்போது அவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையில் காயமடைந்துசிகிச்சை பெற்று வருவதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக் கொள்ளை- சிபிஐ விசாரணை வேண்டும்

முன்னதாக பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி பேசுகையில்,

அரசே நடத்தும் டாஸ்மாக் மதுபான கடைகளால் இளைஞர்கள் வாழ்வு சீரழிந்து விட்டது. இதனால் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.தமிழை படிக்காமலேயே பட்டப்படிப்பை முடிக்கும் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் கல்விக் கொள்ளை நடந்தது. கடந்த ஆண்டு 305 பள்ளிகளுக்கு மிகவும் தாமதமாகஅனுமதி தரப்பட்டது. லஞ்சம் தர தாமதம் ஆனதே இதற்குக் காரணம் இதனால் மாணவர்கள் மிகத் தாமதமாக படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்தக் கொள்ளை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+