இடஒதுக்கீடு- மொய்லி தலைமையில் உயர்மட்ட குழுமத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பாடுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க எந்த அடிப்படையில்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றநீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் எல்.எஸ்.பான்டா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், இந்த உத்தரவைப்பிறப்பித்தது.பிற்பட்ட வகுப்பினர் என எந்த அடிப்படையில் அடையாளம் காணுவது, இட ஒதுக்கீடு பிரச்சனையை அரசுஎப்படி கையாளப் போகிறது என பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு இன்னும் 8 வாரங்களுக்கும் பதிலளிக்கவேண்டும்.
சுகாதார அமைச்சகம் உள்பட சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் இடஒதுக்கீடை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுமுறைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாதி அடிப்படையில் இடம் ஒதுக்கீட்டால் நாட்டை பிளவுபடுத்தப்படும் என பொது நல மனுவில்கூறப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனையை நீதிமன்றம் ஆராய இருப்பதால் பொது நலந் கருதி மாணவர்கள் இடஒதுக்கீடு பிரச்சனையை கைவிட வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
இட ஒதுக்கீட்டை அமல்படுத்த குழுக்கள்:
இந் நிலையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு முறைகளை உருவாக்க மூத்தகாங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி தலைமையில் 13 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை மத்திய அரசுஅமைத்துள்ளது.
இது தவிர தனித் தனி கல்வி நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்ய இந்த உயர்நிலைக் குழுவுக்கு உதவியாகமூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஆய்வு நடத்த சென்னைஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவும்அமைக்கப்பட்டுள்ளது.
புதுவை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்:
![]() |
ஆனால் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படும், வெளி நோயளிகளுக்கான பிரிவுசெயல்படாது எனவும் அறிவித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications