கொக்கி: சென்சார் காட்சியை ஓட்டிய சங்கம்தியேட்டர் அதிபர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கொக்கி படத்தில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை திரையிட்டதாக சென்னையில்பிரபலமான சங்கம் திரையரங்க உரிமையாளர் ராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரண், சஞ்சனா நடித்துள்ள கொக்கி படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிவருகிறது. சென்னையில் சங்கம் திரையரங்க வளாகத்தில் உள்ள தியேட்டரிலும்இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.கொக்கி படத்தில் தணிக்கை செய்யப்பட்ட சில காட்சிகள் சங்கம் திரையங்கில்வெளியிடப்பட்டதாக போலீஸில், தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவர் புகார்கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து படச் சுருளை பறிமுதல் செய்தனர்.
திரையரங்க உரிமையாளர் ராமநாதன், ஆபரேட்டர் வெங்கடேஷ் ஆகியோரை கைதுசெய்தனர். இது தொடர்பாக படத் தயாரிப்பாளர்கள் இருவர் மீதும் வழக்குதொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications