கோட்டையில் விஜயகாந்துக்கு ரசிகர் படை!!
சென்னை:
தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு ஊழியர்களிடையே விஜயகாந்த்துக்குஏராளமான ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். விட்டால் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும்அளவுக்கு அரசு ஊழியர்களிடையே விஜயகாந்த்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.
234 தொகுதிகளிலும் தனித்து நின்று ஒரு தொகுதியில் ஜெயித்தும், மொத்தமாக 28லட்சம் ஓட்டுக்களை அள்ளியும் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் ஆட்டம் காட்டியவிஜயகாந்த் தனி மனிதராக சட்டசபைக்கு வந்து போகிறார்.கடந்த 29ம் தேதி தனது கன்னிப்பேச்சை சட்டசபையில் பதிவு செய்தார் விஜயகாந்த்.தனது பேச்சில் ஊழலை ஒழிக்க வேண்டும், அதற்கு இந்த அரசு உறுதியானநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசியது தலைமைச் செயலகத்தில்பணியாற்றும் பல்வேறு அரசு ஊழியர்களை குறிப்பாக பெண் ஊழியர்களைகவர்ந்துள்ளது.
தனது பேச்சை முடித்து விட்டு விஜயகாந்த் வெளியே வந்தபோது அங்கு ஏராளமானஅரசு ஊழியர்கள், பெண் ஊழியர்கள் கூடி நின்று விஜயகாந்த்தை வரவேற்றனர்.
ஒரு எம்.எல்.ஏ.வை அரசு ஊழியர்கள் கூடி நின்று வரவேற்பது இதுவே முதல் முறைஎன்று ஒரு அரசு ஊழியர் ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.
விஜயகாந்த்தும் கூட இதை எதிர்பார்க்கவில்லை. ஏராளமான அரசு ஊழியர்கள் கூடிநின்றதால் அவரும் அவர்களுடன் சகஜமாக பேச ஆரம்பித்தார்.
வெறுமனே வந்து செல்லாமல் நல்ல நல்ல கேள்விகளாகக் கேட்டு மக்களுக்குதொண்டு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் விஜயகாந்த்துக்கு அறிவுரைவழங்கினர்.
சினிமாவில் பேசுவது மாதிரி பெரிய பெரிய கேள்விகளாக கேட்காதீர்கள், நறுக்கெனநாலு வார்த்தைகளில் கேட்டு ஆட்சியாளர்களைத் திணறடியுங்கள் என்று ஒரு பெண்ஊழியர் கூறியபோது விஜயகாந்த் வாய் விட்டுச் சிரித்து விட்டார்.
அரசு அலுவலகங்களில் ஊழலும், லஞ்சம் புரையோடிப் போய்க் கிடக்கிறது. அதைசரி செய்ய இதுவரை யாருமே முயற்சி கூட செய்ததில்லை. ஆனால் உங்களால்மட்டும்தான் அதைச் செய்ய முடியும்.
இதைச் செய் இரும்புக் கரம் தேவை, அது உங்களிடம்தான் இருக்கிறது என்று ஒருநடுத்தர வயது ஊழியை மிகவும் வேகமாக பேசியபோது விஜயகாந்த் முகத்தில்பெரிய நம்பிக்கை பளிச்சிட்டதைப் பார்க்க முடிந்தது.
உங்களது கட்சிக்கு ஒரு இடம்தான் கிடைத்துள்ளது என்றாலும் நீங்கள் அனைத்துத்தொகுதிகளையும் பற்றிப் பேசலாம், இந்த வாய்ப்பு வேறு எந்தக் கட்சிக்கும் இல்லைஎன்றும் சிலர் விஜயகாந்த்துக்கு எடுத்துக் கூறினர்.
உங்களது தேர்தல் அறிக்கைதான் உண்மையில் புரட்சிகரமானது. இதை பார்த்துத்தான்மற்ற கட்சிகள் காப்பி அடித்து வாக்குறுதிகளை அள்ளி வீசின, இதை நீங்கள் சும்மாவிட்டிருக்கக் கூடாது, மக்களிடம் சரியான முறையில் எடுத்துக் கூறியிருக்க வேண்டும்என்று ஒரு பெண் ஊழியர் ஆதங்கத்துடன் கூறினார்.
இப்படியாக சுமார் கால் மணி நேரம் அரசு ஊழியர்களின் கேள்விக்கனைகளில் சிக்கிஅவர்களின் அன்புப் பிடியிலிருந்து விலக முடியாமல் அங்கேயே நின்று விட்டார்விஜயகாந்த்.
அதன் பின்னர் அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஜயகாந்த், உங்களது ஒத்துழைப்புஇந்த அளவுக்கு இருக்கும்போது நிச்சயம் நான் சாதித்துக் காட்டுவேன், அந்தக் காலம்வரும் என்று கூறி விட்டு கிளம்பிச் சென்றார்.
நல்லவர்களைத்தான் சேர்ப்பேன்:
இந் நிலையில் மதிமுக பிரமுகர் பொடா நாகராஜன் இன்று தனது முன்னிலையில்தேமுதிகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:
நாகராஜன் எங்களது ஊர்க்காரர். அவரை எனக்கு நன்கு தெரியும். ஒரு வியாபாரியானஅவர் 19 மாதம் பொடா சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்தார். மிகவும் நல்லவர்,தன்மையானவர். அவரது ஊர்க்காரர்களே அவரைப் பற்றி என்னிடம் நிறையச்சொல்லியிருக்கிறார்கள். அதனால் அவரை எனது கட்சியில் வரவேற்றுசேர்த்துள்ளேன்.
இதேபோல கடலூர் தொகுதி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட சிவக்குமாரும்எனது கட்சியில் இணைந்துள்ளார். பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எனது கட்சியில்சேர விரும்புகிறார்கள். ஆனால் உடனடியாக அனைவரையும் சேர்த்துக் கொள்ளமுடியாது.
சேர விரும்புவோர் தங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுக்க வேண்டும்.அவர்களைப் பற்றி விசாரித்து, நல்ல அபிப்பிராயம் இருந்தால்தான் கட்சியில்சேர்க்கிறோம்.
இதற்கு முக்கியக் காரணம் எங்களது கட்சியில் உள்ள முக்கால்வாசிப் பேர்இளைஞர்கள். மாற்றுக் கட்சிகளிலிருந்து வருகிறவர்கள், எங்களது கட்சிஇளைஞர்களுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும்.
அப்படி உள்ளவர்களைத்தான் கட்சியில் சேர்க்க முடியும்.
சட்டசபைக்கு இப்போதுதான் முதல் முறையாக சென்றுள்ளேன். ஆளுநர் உரைமுடிந்துள்ளது. அடுத்து பட்ஜெட் தாக்கல் செய்யப் போகிறார்கள்.
15 நாள் விவாதம் இருக்கும் போல. விவாதத்தைப் பார்த்த பிறகுதான் எதையும்சொல்ல முடியும். இப்போது ஒரு பக்க ஓசையாகத்தான் உள்ளது. இரண்டு பக்கம்ஓசை இருந்தால்தான் சட்டசபைக் கூட்டத்தைப் பற்றி முழுமையாக சொல்ல முடியும்என்றார் விஜய்காந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications