தி டாவின்சி கோட் படத்துக்கு தமிழகத்தில் தடை
சென்னை:
தி டாவின்சி கோட் படத்தை திரையிட்டால் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனம் புண்படும்என்பதாலும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படலாம் என்பதாலும், இப்படத்தைத்திரையிடாமல் நிறுத்தி வைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழகஅரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,தி டாவின்சி கோட் திரைப்படத்தை வெளியிடுவதால் தங்களது மனம் புண்படும்படிபல்வேறு மதத்தினர் குறிப்பாக கிறிஸ்தவ சமுதாயத்தினர் அரசிடம்முறையிட்டுள்ளனர். அவற்றை தமிழக அரசு கவனத்துடன் பரிசீலனையில் எடுத்துக்கொண்டுள்ளது.
இந்தப் படம் திரையிடப்பட்டால் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்இருக்கும் என்பதாலும், அமைதிக்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் போராட்டங்கள்,சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதாலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்தங்களது மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலையை உன்னிப்பாக கவனித்து வரவேண்டும்.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து, சினிமாட்டோகிராப் சட்டத்தின் 13வது பிரிவின்கீழ் இப்படம் திரையிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.
இந்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சென்னை மாநகரகாவல்துறை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என பேராயர் எஸ்றா சற்குணம் நேற்றுமுதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications