வரும் சனிக்கிழமை முதல் 2 ரூபாய் அரிசி!
சென்னை:
வருகிற சனிக்கிழமை முதல் ரேஷன் கடைகளில் அரிசி கிலோ 2 ரூபாய்க்குவழங்கப்படும். இத்திட்டத்தின் தொடக்க நாளன்று ரேஷன் கடைக்கு அரிசி வாங்கவருவோருக்கு லட்டுகள், இனிப்புகள் வழங்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.(அல்வா குடுக்காதவரைக்கும் ஓகே!)
திமுகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான 2 ரூபாய்க்கு ஒரு கிலோ ரேஷன்அரிசித் திட்டம் ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் முதல் அமலுக்குவருகிறது.இதற்காக தமிழக அரசு சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.அதேபோல திமுகவினரும் பல்வேறு ஏற்பாடுகளை தடபுடலாக செய்துவைத்துள்ளனர்.
தாம்பரம் பகுதி திமுகவினர், தங்களது பகுதிக்குட்பட்ட அனைத்து ரேஷன்கடைகளிலும், 3ம் தேதி அரிசி வாங்கவருவோருக்கு லட்டுகள் வழங்க ஏற்பாடுசெய்துள்ளனர். மேலும் ரேஷன் கடைகள் முன்பு மைக் செட் கட்டி பாடல்களைஒலிபரப்பி அமர்க்களப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முதல்வர் கருணாநிதி ஜூன் 3ம் தேதி காலை 8 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ளரேஷன் கடையில் 2 ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
முதல் வாடிக்கையாளருக்கு அவரே தனது கையால் அரிசியை அளந்துகொடுக்கவுள்ளார். ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் 84வது பிறந்த நாள் என்பதால்திமுகவினர் படு உற்சாகமாக உள்ளனர்.
அன்றைய தினம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட உழவர்சந்தைகளும் திறந்து வைக்கப்படவுள்ளன. மேலும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்மகளிர் திருமண உதவித் திட்டம் அன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.
இதுவரை ரூ. 10,000 வழங்கப்பட்ட நிதி சனிக்கிழமை முதல் ரூ. 15,000 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications