இட ஒதுக்கீடு: கருணாநிதிக்கு மன்மோகன் கடிதம்
சென்னை:
நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரின்போது பிற்படுத்தப்பட்டோருக்கானஇட ஒதுக்கீடு தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர்கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இது தொடர்பாக கருணாநிதி பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்தில்,பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அவசரச் சட்டம்பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந் நிலையில் மன்மோகன்சிங் கருணாநிதிக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,கல்வி நிறுவனங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க எனதுஅரசு உறுதி பூண்டிருக்கிறது.
இந்த விஷயம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில்சமீபத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுத்தபடி வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் இதுகுறித்து தகுந்த மசோதா கொண்டு வரப்படும்.
மேலும் ஒருங்கிணைப்புக் குழுவில் எடுத்த முடிவின்படி, ஆசிரியர்கள் உள்படகூடுதல் உட்கட்டமைப்பு வசதி போன்ற தேவைகளை ஆராயவும்,
உயர் கல்வி நிறுவனங்களில் அதிக மாணவர்கள் படிப்பதற்கு வசதியான வகையில்விரிவாக்கம் செய்வதற்கு உரிய வழிகாட்டும் திட்டத்திற்கு ஆலோசனை வழங்கவும்ஒரு மேற்பார்வைக் குழுவும்,
அதேபோல பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களின் குழுக்களையும் அமைக்கும்பணியிலும் ஈடுபட்டுள்ளோம் என்று கூறியுள்ளார் மன்மோகன் சிங்.
இதற்கிடையே கருணாநிதி இந்த வாரத்தில் டெல்லி செல்வார் என்று தெரிகிறது.
கருணாநிதி நூல்கள் வெளியீட்டு விழா:
இந் நிலையில் கருணாநிதி எழுதிய காலப்பேழையும், கவிதைச் சாவியும் மற்றும்சிந்தனையும் செயலும் என்ற நூல்களின் வெளியீட்டு விழா நாளை (ஜூன் 2ம் தேதி)சென்னையில் நடைபெறுகிறது.
அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் சிந்தனையும் செயலும் நூலைதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட அதை கவிஞர் வாலி பெற்றுக்கொள்கிறார்.
காலப் பேழையும், கவிதைச் சாவியும் நூலை இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்தா.பாண்டியன் வெளியிட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்அவ்வை நடராஜன் பெற்றுக் கொள்கிறார்.
கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார். மத்திய அமைச்சர் ராஜா, பாமக தலைவர்ஜி.கே.மணி, கம்யூனிஸ்ட் தலைவர் ரங்கராஜன், கனிமொழி கருணாநிதி ஆகியோரும்கலந்து கொள்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications