இட ஒதுக்கீடு தான தர்மம் அல்ல, பிறப்புரிமை!
சென்னை:
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பதைதான தர்மமாக கேட்கவில்லை, அது எங்கள் பிறப்புரிமை என்று காங்கிரஸ் சட்டமன்றதுணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
கவிஞர் கனிமொழி மற்றும் கார்த்தி சிதம்பரம் இணைந்து நடத்தும் கருத்து அமைப்பின்சார்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்துசென்னையில் கூட்டம் நடத்தப்பட்டது.இதில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், அக்கட்சியின் எம்.எல்.ஏ.ரவிக்குமார், திட்டக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் நாகநாதன், பீட்டர்அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், தான தர்மமாக நாம் இட ஒதுக்கீட்டைக்கேட்கவில்லை, அது நமது பிறப்புரிமை, அதைத்தான் கேட்கிறோம்.
சென்னை ஐஐடியில் 450 துறைத் தலைவர்கள் உள்ளனர். இவர்களில் 2 பேர்தான் தலித்சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 80 சதவீதம் பேர் முற்பட்ட சமூகத்தினர்.
22.5 சதவீத இட ஒதுக்கீட்டை இங்கே அமல்படுத்தியிருந்தால் 103 தலித்துகளும், 121பிற்படுத்தப்பட்டவர்களும் துறைத் தலைவர்களாக இருந்திருப்பார்கள்.
கடந்த பொது நுழைவுத் தேர்வில் பிற சமூக மாணவர்களை பின்தள்ளி விட்டு 300எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் ஐஐடியில் நுழைந்துள்ளனர். இட ஒதுக்கீட்டால் வந்தபயன் இது என்றார் பீட்டர்.
திருமாவளவன் பேசுகையில், சாதி என்ற பெயரால் வஞ்சிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டசமூகத்தினர் முன்னேற தரப்படும் வாய்ப்புதான் இட ஒதுக்கீடு. பின்னர் அதுபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதைநாங்கள் வரவேற்கிறோம்.
பொருளாதாரத்தை அளவுகோலாக வைத்து இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கக் கூடாது.அப்படிப் பார்த்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் எல்லா சமூகத்திலும்தான்இருக்கிறார்கள்.
எனவே பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீட்டை நிர்ணயம்செய்வது சமூக முன்னேற்றத்துக்கும் சமூக ஏற்றத் தாழ்வை சரி செய்யவும் சரியாகஇருக்காது என்றார்.
கனிமொழி பேசுகையில், பசியால் இருப்பவனுக்கு முதலில் சாப்பாடு போடவேண்டும். அதை விடுத்து, யார் யார் எத்தனை நாள் பட்டினியாக இருக்கிறார்கள்என்ற விவரத்தைத் தந்தால்தான் சாப்பாடு போடுவேன் என்று கூறுவது நியாயமாகஇருக்காது.
அதுபோல, முதலில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள், அதன் பிறகுவரும் பிரச்சினைகளை சரி செய்ய முயலுங்கள்.
இட ஒதுக்கீட்டை ஆதரித்து தமிழகத்தில் யாருமே குரல் கொடுக்கவில்லைஎன்பதால்தான் நாங்கள் எங்களது கருத்துக்களை இங்கே எடுத்து வைக்க முடிவுசெய்தோம். பொருளாதாரம் நிலையற்றது. எனவே பொருளாதாரத்தைஅடிப்படையாக வைத்து இட ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்யக் கூடாது என்றார்கனிமொழி.
கார்த்தி சிதம்பரம் பேசுகையில், ஆங்கிலம் தெரிந்த மக்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டைஎதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்கள். வட மாநிலங்களில் நிடத்தப்படுவதைப்போல தென் மாநிலங்களில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை.
காரணம் தென் மாநிலங்களில் விவரம் அறிந்தவர்கள் அதிகம். கிரீமி லேயரை இடஒதுக்கீட்டில் புகுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடப்படுகிறது. அப்படி செய்யவேண்டுமானால், ஒவ்வொரு குடும்பத்தினர் குறித்த புள்ளிவிவரங்களும் தேவை.
அதைச் செய்த பின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என்பதை ஏற்க முடியாது.காரணம், இந்த புள்ளி விவரங்களை சேகரிக்கவே பல வருடங்கள் பிடிக்கும்.
சமத்துவமற்ற நிலையை மாற்றுவதற்கு ஏதுவான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வரவேண்டும் என்பது எனது கருத்து என்றார் கார்த்தி.
கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் பின்னர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.இதற்கு திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், நாகநாதன் ஆகியோர் பதில் அளித்தனர்.கருத்து அமைப்பின் இக்கூட்டத்திற்கு பெரும் திரளானோர் திரண்டு வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications