கருணாநிதி பிறந்தநாள்: நாளை முதல்2 ரூபாய் அரிசி: மீண்டும் கண்ணகி சிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் கருணாநிதி 4ம் தேதி டெல்லி செல்கிறார்.
நாளை தனது 84வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதற்காக பல்வேறு முக்கியநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேனாம்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2 ரூபாய்க்கு1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
இதேபோல மூவலூர் ராமாமிர்தம் பெண்கள் திருமண உதவித் திட்டமும் மீண்டும்நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூ. 10,000 நிதியுதவி, ரூ. 15,000ஆக உயர்த்தப்படுகிறது.
மாலையில் சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையை கருணாநிதி மீண்டும்திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications