பிரமோத் மகாஜன் மகன் கவலைக்கிடம்: மதுவில் விஷம்-கொல்ல சதி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகனும் சமீபத்தில் பாஜகவில் சேர்க்கப்பட்டவருமான ராகுல்மகாஜன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உதவியாளர்மர்மமான முறையில் இறந்தார்.

இவர்களுக்கு யாராவது விஷம் கொடுத்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இரவில் இந்த இருவரும் மேலும் சில நண்பர்களும் சேர்ந்து நேற்றிரவு நெடு நேரம் வரை மது அருந்தியுள்ளனர்.பின்னர் உணவு உண்டுள்ளனர். டெல்லி சப்தர்ஜங் ரோட்டில் பிரமோத் மகாஜனுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில்இச் சம்பவம் நடந்தது.

நள்ளிரவில் நண்பர்கள் சென்ற சிறிது நேரத்துக்குப் பின், இருவரும் மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது.இதையடுத்து இருவரையும் அதிகாலை 3.45 மணியளவில் வீட்டின் வேலையாட்கள் அப்பல்லோமருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.

ஆனால், ஆனால், வழியிலேயே மொய்த்ரா இறந்துவிட்டார்.

மதுவில் விஷம் கலக்கப்பட்டதாலோ அல்லது அதிக அளவில் போதை வஸ்து உண்டதாலோ இவர்கள்பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாஜனுக்கு ஒதுக்கப்பட்ட அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது ஷாம்பெயின் பாட்டில்களும்,அருகில் வெள்ளை நிற பெளடருடன் கூடிய சிறிய பாக்கெட்டுகளும் கிடந்தன. அவை போதை மருந்தா அல்லதுவிஷப் பெளடரா என்ற சோதனை நடக்கிறது.

வீட்டின் வேலைக்காரர்களிடம் விசாரித்தபோது, 3,4 பேருடன் அமர்ந்து ராகுலும் உதவியாளரும் மதுஅருந்தியதாகவும் பின்னர் அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டு மீண்டும் 45 நிமிடங்களுக்குப் பின் திரும்பிவந்ததாகவும் கூறியுள்ளனர். திரும்பி வந்தவர்கள் வேலையாட்களை அழைத்து, ராகுலுக்கும் மொய்த்ராவுக்கும்உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டு, பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. ராகுல், மொய்தராவின் செல்போன்களில் உள்ள நம்பர்களைவைத்து இவர்களை அடையாளம் காண முயற்சி நடந்து வருகிறது.

வேலையாட்கள் ராகுலின் அறையில் சென்று பார்த்தபோது அவர் மயக்கமாகிக் கிடந்துள்ளார். மொய்த்ராவின்வாயில் நுரை தள்ளியுள்ளது. இதையடுத்து இருவரையும் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.

ராகுல் மகாஜனுக்கு வயது 26. பிரமோத் மகாஜனின் மறைவைத் தொடர்ந்து கடந்த 30ம் தேதி தான் அவர்பாஜகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+