• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுவையில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து

By Staff
|

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி சட்டசபையில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து பெரிய கட்சியாக திமுக உள்ளது. எனவேதங்களது கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று அக்கட்சிகோரி வந்தது. ஆனால் இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

காங்கிரஸ் அரசுக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. எனவே அதைஆளுங்கட்சியாகவே கருத வேண்டும். அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கக்கூடாது என்று கோரி வந்தது.

இந்த நிலையில் சபாநாயகாரகப் பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன், திமுக மற்றும்அதிமுக கோரிக்கைகளைப் பரிசீலித்து தற்போது முடிவை அறிவித்துள்ளார்.

அதன்படி திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின்சட்டசபைத் தலைவர் நஜீம் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகசட்டசபை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X