அரங்கநாயகம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அரங்கநாயகம், கு.லாரன்ஸ் ஆகியோர் மீதுகிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் இருவரது வழக்குகளிலும் விசாரணை தொடங்கவுள்ளது. எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா தலைமையில் அமைந்த முதல் அதிமுக அரசில்அமைச்சர்களாக இருந்தவர்கள் அரங்கநாயகம், லாரன்ஸும். கல்வித்துறைஅமைச்சராக இருந்த அரங்கநாயகம் மீது பின்னர் வந்த திமுக ஆட்சியில்வருமானத்திற்கு அதிகமாக ரூ. 92 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்குதொடரப்பட்டது.இந்த வழக்கில் அரங்கநாயகம், அவரது மனைவி மற்றும் 2 மகன்களும்சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு இத்தனை காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.தற்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
இவ்வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 185சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தனி நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்திகுற்றப்பத்திரிக்கையை ஏற்றுக் கொண்டார். வருகிற 13ம் தேதி முதல் விசாரணைதொடங்கும் என அவர் அறிவித்துள்ளார்.
இதேபோல வனத்துறை அமைச்சராக இருந்த லாரன்ஸ் மீது கடந்த 1997ம் ஆண்டுசொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் ரூ. 30 லட்சம் அளவுக்கு சொத்துசேர்த்ததாக லாரன்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதிலும் தற்போதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை 12ம் தேதிதொடங்குகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications