மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
கர்நாடக மாநிலம் கபிணி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர்அணைக்கு வரத் தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயரத்தொடங்கியுள்ளது.
காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.குறிப்பாக கர்நாடகத்தின் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துவருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பத் தொடங்கியுள்ளன.இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி கபிணி அணையிலிருந்து உபரி நீர்திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திறந்து விடப்பட்ட நீர் இன்று அதிகாலைமேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.
இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5060 கன அடியாகஉயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.58அடியாக இருந்தது.
தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணை நிரம்பும்எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications