தமிழகம் முழுவதும் கேப்டன் சுற்றுப்பயணம்
சென்னை:
தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். நாளை இந்தசுற்றுப்பயணம் தொடங்குகிறது.
விஜயகாந்த்தின் தேமுதிக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட்டது. இதில் விஜயகாந்த்துக்கு மட்டுமே வெற்றி கிடைத்தது.ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றாலும் கூட தமிழக அரசியல் வரலாற்றிலேயேமுதல் முறையாக சிறுபான்மை அரசு ஏற்பட விஜயகாந்த் கட்சி வழி ஏற்படுத்திவிட்டது. இதனால் தமிழக மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் விஜயகாந்த் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.
தனது கட்சிக்குக் கிடைத்துள்ள பெரும் வரவேற்பினால் சந்தோஷம்அடைந்திருப்பதாக கூறியுள்ள விஜயகாந்த், உள்ளாட்சித் தேர்தலில் 1 லட்சம்வேட்பாளர்களை தனது கட்சியின் சார்பில் களம் இறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தமிழகசுற்றுப்பயணத்தை விஜயகாந்த் மேற்கொள்ளவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போதுகட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
நாளை கன்னியாகுமரியிலிருந்து தனது சுற்றுப்பயணத்தை விஜயகாந்த்தொடங்குகிறார். குமரி, நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும்விஜயகாந்த் தொடர்ந்து, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை,தேனி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்கிறார்.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல், கரூர், நீலகிரி, காவை, நாமக்கல், சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும்செல்கிறார்.
தினசரி 2 மாவட்டங்களுக்கு அவர் செல்கிறார். கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல்தொடர்பான ஆலோசனையில் ஈடுபடும் அவர் கட்சி வளர்ச்சிப் பணி குறித்தும்விவாதிக்கிறார். உறுப்பினர் சேர்க்கையையும் இந்த பயணத்தின்போது முடுக்கிவிடவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications