ஜெ. வழக்கு: ஜூலை 1க்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கைஜூலை 1ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பாக ஜெயலலிதா, சசிகலாஉள்ளிட்டோர் மீது சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய வருமான வரித்துறைக்கு அனுமதிவழங்கி சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கை விசாரித்து முடிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்றுகோரி எழும்பூர் கூடுதல் தலைமை நீதிபதி உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் மூலம்கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கடிதத்தைப் பரிசீலித்த விடுமுறை கால நீதிபதிகள் தாக்கூர், ஹரிஜித்பசாயத்ஆகியோர், ஜூலை 1ம் தேதி வரை அவகாசம் அளித்து அதற்குள் வழக்கை முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications