தலைநகர பயணம் சுபம்-கருணாநிதி சொல்கிறார்
சென்னை:
தனது டெல்லி பயணம் சுபமாக முடிந்ததாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
2 நாள் டெல்லி பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் கருணாநிதி நேற்று இரவுசென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், தமிழகத் திட்டப் பணிகளுக்கு ரூ. 12,500 கோடி கிடைத்துள்ளது. இதுமிகவும் சந்தோஷமான செய்தி. காரணம் தமிழகத்திற்கு இதுவரை இந்த அளவுஅதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில்லை.திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்ற சிறப்பு நிதி தேவைஎன்று கோரியுள்ளோம். இதுகுறித்து உரிய முறையில் பரிசீலிப்பதாக மத்தியஅரசுகூறியுள்ளது.
தமிழகத்திற்கு மாதந்தோறும் ஒதுக்கப்படும் மண்ணெண்ணையின் அளவை 6000கிலோ லிட்டரிலிருந்து 16,000 கிலோ லிட்டராக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தமிழக ரயில் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் உறுதியளித்துள்ளார்.
சென்னை, மேட்டூரில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரு அணல் மின்நிலையங்களை அமைக்க மாநில அரசுக்கு மத்திய அரசு உதவும் என மத்தியமின்துறை அமைச்சரும் உறுதியளித்துள்ளார் என்றார் கருணாநதி.
உங்களது கோரிக்கைகளுக்குப் பிரதமர் என்ன ரியாக்ஷன் காட்டினார் என்றுகேட்டபோது, எனது கோரிக்கைகளுக்கு நிதி அமைச்சர் ப.சிதம்பரம் முன்னுரைஎழுதினார். அதை சோனியா காந்தி வழிமொழிந்தார். பிரதமர் முடித்து வைத்தார்என்றார் கருணாநிதி.
தொடர்ந்து செய்தியாளர்கள், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளைஇந்தியாவிலேயே சென்னையில் உள்ளவர்கள் மட்டும்தான் பார்க்க முடியாது என்றநிலை உள்ளது.
செட் டாப் பாக்ஸ் திட்டத்தால் கால்பந்துப் போட்டிகளை பார்க்க முடியாத நிலைஉள்ளது. எனவே ரசிகர்களின் நலனுக்காக சன் டிவியின் ஏதாவது ஒரு சானல் மூலமாககால்பந்துப் போட்டிகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுப்பீர்களா, கலாநிதி மாறனிடம்இதுதொடர்பாக பேசுவீர்களா என்று கேட்டபோது, தயாநிதி மாறன் சொல்வதையேகலாநிதி கேட்க மாட்டார் என்று சிரித்தபடி கருணாநிதி பதிலளித்தார்.
ஆனாலும் விடாமல் தொடர்ந்து சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, தேவைப்பட்டால்இலவச கேபிள் இணைப்பும் தருவோம் என்றெல்லாம் கூறினீர்களே என்றுசெய்தியாளர்கள் கேட்டபோது, தவறான கவரிக்கு வந்து நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்என்று கூறியபடி அங்கிருந்து கிளம்பி விட்டார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications