• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: ஜெர்மனியில் கோலாகலம்

By Staff
|

மியூனிக்:

உலகமே பரபரப்பாக எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று ஜெர்மனியில் உள்ள மியூனிக்நகரில் தொடங்குகிறது. இதையொட்டி ஜெர்மனியே கோலாகலம் பூண்டுள்ளது.

இன்று தொடங்கும் முதலாவது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனியை, எதிர்த்து கோஸ்டாரிகா அணிவிளையாடுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு மியூனிக்கில் புதிதாக கட்டப்பட்டுள்ளஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

Germany Food ball Fans
முன்னதாக தொடக்க நிகழ்ச்சி இரவு 7.50 மணிக்கு தொடங்குகிறது. உலகம் முழுவதில் இருந்து 32 நாடுகள்கோப்பையை வெல்ல களத்தில் இறங்குகின்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது.இறுதி ஆட்டம் உள்பட மொத்தம் 68 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

பங்கேற்றுள்ள 32 அணிகளும் தலா 4 அணிகள் வீதம் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியன்பிரேசில் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பெறும் அணி அடுத்தகட்ட ஆட்டத்துக்கு முன்னேறும். 16அணிகளில் 8 அணிகள் காலிறுதிக் சுற்றுக்கு முன்னேறும்.

அறையிறுதி ஆட்டங்கள் ஜூலை 5,6 தேதிகளில் நடைபெறும். ஜூல்ஸ் ரிமெட் கோப்பை யாருக்கு என்பதற்கானஇறுதிப்போட்டி பெர்லின் நகரில் ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக 6ம் தேதிஸ்டட்டகார்ட்டில் மூன்றாம் இடத்துக்கான போட்டி நடைபெறும்.

கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்திரேலியா, 1974ம் ஆண்டுக்கு பின் முதல் முதலாக இந்தஉலககோப்பை போட்டியில் பங்கேற்கிறது. அதுபோல ஆப்பிரிக்காவில் இருந்து அங்கோலா, கானா, ஜவரிகோஸ்ட், டோகோ ஆகிய 4 நாடுகள் முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கின்றன.ஆப்பிரிக்காவில் இருந்து 4 நாடுகள் பங்கேற்பது இதுவே முதல்முறை ஆகும்.

Food ball Fan
ஆசியாவிலிருந்து ஜப்பான், கொரியா, ஈரான், செளதி அரேபியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. மிகஅதிகபட்சமாக ஐரோப்பிய கண்டத்திலிருந்து தான் 14 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

நம்ம நாடு எப்போ அங்கே போகுமோ?

போட்டிகளைக் காண உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் ஜெர்மனி வந்துகுவிந்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X