திமுக அரசு விரைவில் வீழும்: நாஞ்சில் சம்பத்
சென்னை:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. விரைவில்சிறுபான்மை திமுக அரசு கவிழும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று மதிமுககொள்கை விளக்க அணியின் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. நடிகர் எஸ்.வி.சேகர் வாக்காளர்களுக்குநன்றி தெரிவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் நாஞ்சில்சம்பத் கலந்து கொண்டு பேசுகையில், திமுக தனது குடும்ப அரசியலை விடவில்லைஎன்பதை அவர்கள் நடந்து கொள்ளும் போக்கிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டத் தொடக்க விழாவில் தேவையில்லாமல்ஸ்டாலினுக்கும், தயாநிதி மாறனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். முதல்வராகஇருக்கும் கருணாநிதியே தலைமை தாங்க வேண்டிய விழாவில், ஸ்டாலின் தலைமைதாங்குகிறார்.
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சமப்ந்தமே இல்லாமல் விழாவில் கலந்துகொள்கிறார். கருணாநிதியின் ஒருபக்கம் ஸ்டாலின் நிற்கிறார், மறுபக்கம் தயாநிதிமாறன் இருக்கிறார்.
கருணாநிதி குடும்ப அரசியலை ஊக்குவிக்கிறார். அவரது இந்தப் போக்கை எதிர்த்துமதிமுக தொடர்ந்து தீவிரமாக போராடும்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்கஆரம்பித்துள்ளது. இவர்களும் கொடுக்க மாட்டார்கள், ஆனால் அவர்களும்வாங்காமல் விட மாட்டார்கள். எனவே சீக்கிரமே திமுக அரசு கவிழும், மீண்டும்அதிமுக ஆட்சிக்கு வரும்.
இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம் என்று கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறதுதிமுக. உண்மையில் தனது குடும்பத்தின் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்தில்தான்இலவச கலர் டிவி திட்டத்தை அறிவித்தார் கருணாநிதி.
திமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் சென்னையில் 7 தொகுதிகளைப் பிடித்துஅதிமுக சாதனை படைத்துள்ளது. வரப் போகிற உள்ளாட்சித் தேர்தலில் அத்தனைஇடங்களிலும் அதிமுக கூட்டணி மாபெரும் சாதனை படைக்கும் என்றார் சம்பத்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications