சுகோய்-30 போர் விமானத்தில் பறந்து கலாம் சாதனை!!!
புனே:
![]() |
ஏற்கனவே நீர்மூழ்கியில் பயணம் மேற்கொண்ட கலாம் ரஷ்யாவின் சுகோய் போர் விமானத்தில் பறக்க விருப்பம்தெரிவித்தார். இதையடுத்து இந்திய விமானப் படையின் சுகோய் 30- எம்கேஐ ரக போர் விமானத்தில் அவர்பறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஒலியை விட இரு மடங்கு வேகத்தில் பறக்கும் இந்த விமானத்தில் பயணிக்க கலாமுக்கு மருத்துவபரிசோதனைகள் நடந்தன. போர் விமானத்தில் பறக்கும் அளவுக்கு கலாம் பிட்ஆக இருப்பதாக மருத்துவர்கள்தெரிவித்தனர். அவருக்கு வயது 75 என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இன்று கலாமின் கனவுப் பயணம் அரங்கேறியது. புனே நகரில் உள்ள லொகேகான் விமானப்படைத் தளத்தில் இருந்து சுகோய் விமானத்தில் கலாம் பயணித்தார். விமானிகள் அணியும் ஜி சூட் அணிந்துமிகவும் ஆர்வத்துடன் கலாம் சுகோயில் சென்றார்.
சுகோய் ஸ்கூவாட்ரன் பிரிவின் கமாண்டிங் ஆபிசர் விங் கமாண்டர் அஜய் ரத்தோர் விமானத்தை இயக்கிச்சென்றாார். ஒலியின் வேகத்தை விட அதிகமாக வேகத்தில் விமானத்தை இயக்கிய விமானி, சுகோயின்தொழில்நுட்பங்களை கலாமுக்கு விளக்கினார். விமானிக்குப் பின்னால் கோ-பைலட் இருக்கையில் அமர்ந்தபடிகலாம் சுகோயின் திறன்களை நேரில் கண்டு உணர்ந்தார்.
![]() |
இதன் மூலம் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை கலாம் பெற்றுள்ளார்.
25,000 அடி உயரத்தில் (சுமார் 8 கி.மீ) சுமார் 30 நிமிடங்கள் வானில் சுற்றிய கலாம் தரையிறங்கியபோதுஅவருக்கு விமானப் படையினர் மிகச் சிறப்பான வரவேற்பளித்தனர்.
![]() |
வெற்றிவேல்..
சுகோயின் இந்திய ரக விமானத்துக்கான (சுகோய் 30 எம்கேஐ- இதில் ஐகுறிப்பிடுவது இந்தியாவை) கம்ப்யூட்டர் கண்ட்ரோல் சாப்ட்வேரைஉருவாக்கியது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பாதுகாப்புஆராய்ச்சி மையத்தில் (டிஆர்டிஓ) தான் இந்த விமானத்துக்கான ஏவியானிக்ஸ்உருவானது.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் வெற்றிவேல் என்ற ரகசிய பெயரில் இந்தசாப்ட்வேர் எழுதப்பட்டது. முருகப் பெருமானின் கையில் உள்ள வேலைநினைவூட்டும் வகையில் இந்த ஏவியானிக்ஸ் சாப்ட்வேருக்கு பெயர் சூட்டியது..நம்ம கலாமே தான்.
மிக் விழுந்து நொறுங்கியது:
இதற்கிடையே ஜாம்நகர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் போர் விமானம் இன்று தரையில் விழுந்துநொறுங்கியது. ஆனால், விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பிவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?















Click it and Unblock the Notifications