ஊராட்சிகள்.. ஏத்தி.. இறக்கி.. ஏத்தி..

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பு ஊராட்சிகளாக தகுதி இறக்கம் செய்யப்பட்டபேரூராட்சிகள் மீண்டும் பேரூராட்சிகளாக தகுதி உயர்த்தப்படவுள்ளன.

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி மற்றும் நகராட்சிமற்றும் மாநகராட்சி என மூன்று நிலைகள் மட்டுமே இருக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என நான்குநிலைகள் இருந்து வந்தன.

இதனால் பேரூராட்சிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காத நிலை ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் 500க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள்சிறப்பு நிலை ஊராட்சிகளாகவும், சில ஊராட்சி அமைப்புகள், தேர்வு நிலைநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இதன் காரணமாக தரம் குறைக்கப்பட்ட பேரூராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள்பாதிக்கப்பட்டன. இதனால் அவற்றை மீண்டும் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந் நிலையில் தற்போதைய திமுக ஆட்சியில் தரம் குறைக்கப்பட்ட பேரூராட்சிகள்பழைய படி பேரூராட்சிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகி 20ம் தேதிக்குள் தரம் குறைக்கப்பட்ட பேரூராட்சிகளில் தங்களைமீண்டும் பேரூராட்சிகளாக உயர்த்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அதைசம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தரம் குறைக்கப்பட்ட அனைத்து பேரூராட்சிகளும் பழையபடிபேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+