காவல்துறையை ஆட்டிப் படைக்கும் வாஸ்து!
சென்னை:
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் பலர்வாஸ்துப்படி தங்களது அலுவலகத்தை மாற்றி அமைத்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள்,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.சென்னை மாநகர காவல்துறையில், கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகள்அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டு திமுகவுக்கு ஆதரவான அல்லதுநடுநிலையான அதிகாரிகள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
புதிய அதிகாரிகளில் பலர் வாஸ்து மீது அபார நம்பிக்கை கொண்டவர்களாகஉள்ளனர். இதனால் தங்களது அலுவலகத்தை வாஸ்து சாஸ்திரப்படி பல்வேறுமாற்றங்களை செய்து வருகின்றனர்.
சில உயர் அதிகாரிகள் தங்களது உட்காரும் திசையை மாற்றிக் கொண்டுள்ளனர். பலர்,அலுவலக அறையின் நுழைவாயிலை மாற்றியுள்ளனர். சிலரோ, பொருட்கள்இருக்கும் இடத்தையே மாற்றி வைத்துள்ளனர்.
சில உயர் அதிகாரிகளின் அறைகளில் புதிய பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.இந்திய வாஸ்து தவிர சீன நாட்டு ஃபெங் சூயி முறைப்படியும் சிலர் தங்களதுஅலுவலகத்தை மாற்றி அமைத்துள்ளனர்.
இதுகுறித்து ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், வாஸ்துப்படி எனது அறையைமாற்றவில்லை. எனது செளகரியத்திற்கேற்ப எனது அலுவலக அறையை வைத்துக்கொள்ளும் உரிமை எனக்கு உண்டு. அதன்படிதான் சில மாற்றங்களை செய்துள்ளேன்என்று சப்பைக் கட்டுக் கட்டினார்.
டிஜிபி அலுவலகம், ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில்பதவியேற்றுள்ள புதிய அதிகாரிகளின் அறைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள்நடந்துள்ளன.
இதுவரை இடமாற்றம் செய்யப்படாமல் தப்பிப் பிழைத்திருக்கும் சில அதிகாரிகளோ,தங்களது இடமாற்றம் வந்து விடக் கூடாது என்பதற்காக சிறப்பு யாகங்களைரகசியமாக செய்து வருகிறார்களாம்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications