இடைத்தேர்தல்-பிடிஆர் மகனை களமிறக்கும் திமுக
சென்னை:
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மரணத்தையடுத்து மதுரை மத்திய தொகுதியைப் பிடிக்க மதுரைதிமுகவின் பல விஐபிக்களும் கடும் போட்டியில் இறங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இங்கு தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது. திமுக ஆட்சிக்குவந்து நடக்கும் முதல் இடைத் தேர்தல் என்பதால் திமுகவும், அதிமுகவும் மத்திய தொகுதியில் கடும்பலப்பரிட்சைக்குத் தயாராகி வருகின்றன.இந்தத் தொகுதியில் முஸ்லீம்கள், பிள்ளைமார்கள், கோனார்கள், முக்குலத்தோர் அதிக எண்ணிக்கையில்வசிக்கின்றனர்.
திமுகவுக்கு சட்டசபையில் மெஜாரிட்டி பலம் இல்லாத நிலையில் இந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற தீவிரம்காட்டி வருகிறது. அதே நேரத்தில் மதுரை நமது கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்து, திமுக அரசுக்கு அதிர்ச்சிவைத்தியம் தரும் தீவிரத்தில் உள்ள உள்ளது அதிமுக.
இந்தத் தொகுதியை தனது ஆதரவாளருக்கு வாங்கித் தர அழகிரி ஒரு பக்கமும், பொன்.முத்துராமலிங்கம்போன்றவர்கள் மறு பக்கமும் போட்டி போட்டு வருகின்றனர். முஸ்லீம்கள் அதிகம் உள்ளதால், இங்கு முஸ்லீமைநிறுத்த வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.
இதையடுத்து சத்தம் போடாமல் மறைந்த பிடிஆரின் மகன் தியாகராஜனையே நிறுத்திவிடலாமா என்ற முடிவில்இருக்கிறாராம் ஸ்டாலின். ஸ்டாலின் குடும்பத்துக்கு பிடிஆர் சம்மந்தி முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஆர் குடும்பம் யாரை விரும்புகிறதோ அவருக்கே இந்தத் தொகுதியைத் தருவது என்ற திட்டத்தில் உள்ளாராம்ஸ்டாலின். முடிந்தால் பிடிஆரின் மகன் தியாகராஜனை அரசியலுக்குக் கொண்டு வரவும் திமுக முயன்றுவருகிறது. இது தொடர்பாக ஸ்டாலினே தியாகராஜனுடன் பேசி வருவதாகத் தெரிகிறது.
அமெரிக்க பெண்ணை மணந்து அங்கேயே செட்டிலாகிவிட்ட தியாகராஜனுக்கும் லேசாக அரசியலில் ஆர்வம்பிறந்துவிட்டது என்கிறார்கள்.
தியாகராஜனை திமுக நிறுத்தினால் அவரை எதிர்க்க காளிமுத்துவை நிறுத்தலாமா என அதிமுக யோசித்துவருகிறது. கடந்த தேர்தலில் உடல் நலக் குறைவால் காளிமுத்துவால் போட்டியிட முடியாமல் போய்விட்டது.
அரசியலுக்கு வருவது குறித்து தியாகராஜன் அளித்துள்ள பேட்டியில்,
பொது வாழ்க்கையில் தாத்தா, அப்பா வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் ரொம்ப பெரியது. அவர்களைபோலஎன்னால் செய்ல்பட முடியுமா என்ற கேள்வி என் மனதுக்குள் ஒடிகொண்டு இருக்கிறது. வருடத்துக்கு பல கோடிரூபாய் வரும் என் தொழில் எல்லாம், மக்களின் அன்புக்கு முன்னால் பெரிய விஷயமே இல்லை எனத்தோன்றுகிறது.
விரைவில் நான் நல்ல முடிவை சொல்வேன். இந்த குடும்பத்தில் இருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்என்பது எனக்கு புரிகிறது. அதை நிறைவேற்றுவது என் கடமை என்றார்.
தியாகராஜனும் கரை வேட்டி கட்டிவிடுவார் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications