பெரியாறு அணை : பேச்சு மூலம் தீர்வு - கருணாநிதி, அச்சுதானந்தன்
சென்னை:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் கேரள முதல்வர்அச்சுதானந்தன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் பிரச்சினை தொடர்பாககருணாநிதியுடன் விவாதிக்க கேரள முதல்வர் அச்சுதானந்தன் சென்னைக்கு வந்துகருணாநிதியை சந்தித்தார்.கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற அச்சுதானந்தன்கருணாநிதியுடன் பேசினார்.
இந்த சந்திப்பின்போது கேரள கல்வித்துறை அமைச்சர் பேபி ஜான் உடன் இருந்தார்.கருணாநிதியுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார்.சுமார் ஒரு மணி நேர சந்திப்புக்குப் பின்னர் அச்சுதானந்தன் வெளியில் காத்திருந்தநிருபர்களிடம் பேசுகையில், இரு மாநிலங்கள் தொடர்புடைய பல்வேறு விஷயங்கள்குறித்து இருவரும் பேசினோம்.
கோவை மத்திய சிறையில் கடந்த 8 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள மதானிகுறித்தும் பேசினோம். அவரது எடை வெகுவாக குறைந்து விட்டது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சைஅளிக்க வேண்டியது குறித்து கருணாநிதியுடன் பேசினேன்.
மனிதாபிமானத்துடன் அவரது பிரச்சினையை அணுகி அவரை ஜாமீனில் விடுதலைசெய்ய வேண்டும் என்று கோரினேன்.
எனது கோரிக்கைகளை பரிவுடன் கேட்டுக் கொண்ட கருணாநிதி மதானிக்கு சிறந்தசிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.
ஜாமீனில் அவரை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுமாறு எங்களைஅறிவுறுத்தினார்.
இரு மாநில நதிநீர்ப் பிரசினைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சுமூக தீர்வுகாண முடியும்.
இதே கருத்தையே கருணாநிதியும் கொண்டுள்ளார் என்றார் அச்சுதானந்தன். பின்னர்கருணாநிதி பேசுகையில், மதானி மிகவும் பலவீனமாக இருப்பதா அச்சுதானந்தன்தெரிவித்தார். 140 கிலோ எடை கொண்டிருந்த அவர்தற்போது 53 கிலோ எடையுடன்மிகவும் பலகீனமாக இருப்பதாகவும், அவரது உடல் நிலையைக் கருதிமனிதாபிமானத்துடன் அவரை ஜாமீனில் விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு கோரினார்.
மருத்துவ ரீதியாக எங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். மதானிஜாமீன் குறித்து சட்டப்படி அவர்கள்தான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு முதல் கன்னியாகுமரியில் இருக்கிற நெய்யாறு பிரச்சினை வரைபேசினோம். மறுபடியும் தமிழக முதல்வரோடும், அமைச்சர்களோடும் மீண்டும்பேசுவதாக அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
பேசி நல்ல முடிவு எடுப்போம் என்று கூறினார் அவர். நாங்களும்
அதை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். விரைவில் அவர்களுடைய அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் பேச்சுவார்த்தை எப்போது என்பதை முடிவுசெய்வார்கள் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications