ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வு
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத தொடர்ந்து ஆம்னி எனப்படும் தனியார்சொகுசுப் பேருந்துக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குதினசரி நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அரசுப் பேருந்துகளை விட இந்த பேருந்துகளில் கட்டணம் பல மடங்குவசூலிக்கப்படுகிறது.
விடுமுறைக் காலங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும்போதெல்லாம்ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்படும். தற்போது பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்திருப்பதால் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம்உயர்த்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தின்சில ஊர்களுக்கு சென்னையிலிருந்து செல்ல வசூலிக்கப்படும் புதிய கட்டணப்பட்டியல் விவரம்:
மதுரை - ரூ. 360, கன்னியாகுமரி - ரூ. 440, நாகர்கோவில் - ரூ. 430, திருநெல்வேலி- ரூ. 400, சேலம் - ரூ. 370, ஈரோடு - ரூ. 350, தஞ்சாவூர் - ரூ. 250, சிதம்பரம் - ரூ.150, காரைக்கால் - ரூ. 220, கடலூர் - ரூ. 140.
திருவனந்தபுரத்திற்கு ரூ. 510ம், விசாகப்பட்டனத்திற்கு ரூ. 870ம், விஜயவாடாவிற்குரூ. 520ம் வசூலிக்கப்படுகிறது.
ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதால் அரசுபேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் அரசு விரைவுப் பேருந்துகளிலும் விரைவில் கட்டணம் உயரவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
கர்நாடகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால்,தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின்கட்டணத்தையும் உயர்த்தியாக வேண்டும்.
எனவே விரைவில் பெங்களூர், மைசூர் போன்ற இடங்களுக்கான பயணிகள்கட்டணம் கணிசமாக உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications