திமுகவை பாராட்டும் அதிமுக ஐ.என்.டி.யூ.சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் திமுக அரசு நல்ல திட்டங்களைசெய்யும்போது அதை பாராட்டமால் இருக்க மாட்டோம் என ஐ.என்.டி.யூ.சி.தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ்கட்சியிடம் தங்களுக்கு சில சீட்களை ஒதுக்க வேண்டும் என்று கோரியது. ஆனால்,காங்கிரஸ் கட்சி அதற்கு மறுத்து விட்டது.

இதனால் கடுப்பாகிப் போன ஐஎன்டியூசி அப்படியே அதிமுக கூட்டணிக்குத்தாவியது.

அதிமுக கூட்டணியில் 2 சீட்களைப் பெற்ற இந்த அமைப்பு சிங்காநல்லூர்தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. வில்லிவாக்கத்தில் தோல்வியைத் தழுவியது.தேர்தலுக்குப் பின்னர் அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில்நடந்தது.

கூட்டத்திற்குத் தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்ஜி.காளன், எம்.எல்.ஏ. சின்னச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 2 தொகுதிகள் கொடுத்து சட்டசபைத் தேர்தலில் ஆதரவும் கொடுத்தஅதிமுகவுக்கும், அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்துதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.திமுக அரசின் கிலோ அரிசி 2 ரூபாய், இலவச கலர் டிவி திட்டம், கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டம்,

தலா 2 ஏக்கர் நிலம் ஆகிய திட்டங்களை ஐ.என்.டி.யூ.சி வரவேற்று பாராட்டுகிறதுஎன்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் காளன் பேசுகையில்,

அதிமுக கூட்டணியில்தான் நாங்கள் நீடிக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள்கூட்டணியாகத்தான் போட்டியிடுவோம்.

அதிமுக கூட்டணியில் நீடித்தாலும் கூட திமுக அரசின் நல்ல திட்டங்களை நாங்கள்வரவேற்போம், பாராட்டுவோம்.

சட்டசபையில் எங்களது எம்.எல்.ஏ. சின்னச்சாமி, ஐஎன்டியூசியின் குரலாகவேசெயல்படுவார் என்றார் காளன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+