இது ஆரிய மாயையை ஒழிக்கும் அணுகுண்டு-கருணாநிதி
தஞ்சாவூர்:
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற உத்தரவு, ஆரிய மாயையைஒழிக்கும் அணுகுண்டு என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று உத்தரவிட்டுள்ள கருணாநிதியைபாராட்டி தஞ்சையில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. திராவிடர் கழகம்ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டம் மிகப் பெரிய மாநாடு போல நடந்தது.தஞ்சை திலகர் திடலில் நடந்த விழாவில் கருணாநிதிக்கு கி.வீரமணி பொன்னாடைபோர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,
கீரி, பாம்பு பகை. அவை இரண்டுக்கும் சண்டை வரும். இறுதியில் கீரி வெல்லும்.ஆனால் பாம்பின் விஷம் கீரியின் உடம்பில் இருக்கும். அந்த ரண காயத்தை ஆற்றயாரும் அறியாத இடத்திற்குச் சென்று, மூலிகை செடியில் படுத்து உருண்டு புரளும்.
அதேபோல ஆரிய நச்சரவங்களால் எனது உடலில் ஏற்பட்ட காயம் பெரியார் திடலில்விழுந்து புரண்டால் ஆறி விடும். பெரியார்தான் எனது காயங்களுக்கு மருந்து.
பெரியார் என்ற ஆலமரத்தின் விழுதுகள், கிளைகள், இலைகள் எல்லாம் எனக்குஆறுதலாக, மருந்தாக செயல்பட்டன. அதில் உள்ள ஒரு ஆலமரக் கன்றுதான் வீரமணி.அந்த காயம் தொடர் கதை. அதை ஆற்றுகின்ற இடம் திராவிடர் கழக கூடாரம்.
இதைக் கூறுவதால் வீரமணி தயவு எனக்கும், எனது தயவு வீரமணிக்கும் தேவை எனஎண்ணாதீர்கள். இது இன ஒற்றுமை.
திகவும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி. சில நேரங்களில் வெடிக்காமல்இருக்கலாம். ஆனால் வெடிக்கிற நேரத்தில், யாரைக் குறி பார்க்கிறதோ அது தவறாமல்குறி பார்த்து வெடிக்கும்.பரம்பரை யுத்தம் என்று பேசினார்கள். இப்போது யுத்தம் முடிந்து விட்டது. இன்னும்கூட முடியாமல் உள்ளது. அந்த யுத்தத்தில் வீரமணியும், நானும் துணையாகஇருப்போம். அப்போதுதான் பரம்பரை யுத்தத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.
பெரியார் மறைந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து சாதியினரும் அர்ச்சகர்ஆகலாம் என்ற உத்தரவு அமலாகியுள்ளது என்றார் வீரமணி. அதன் நினைவாகஎனக்கு 34 கிலோ எடையுள்ள நினைவுச் சின்னத்தையும் வழங்கியுள்ளார்.
இது தங்கமா, வெள்ளியா, பித்தளையா என்று எனக்குத் தெரியவில்லை. தங்கம்,வெள்ளியாக இருந்தால் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்துக் கூட நிறைவேற்றிஇருக்கலாம் (கூட்டத்தில் சிரிப்பு).
நினைவுச் சின்னத்தை நீங்கள் பார்த்திருக்க முடியாது என்பதால் விளக்கிக் கூறுகிறேன்.அதில் ஒரு ஆலயம் போன்ற கருவறை உள்ளது. அதில் ஒரு தமிழன், நம்மவைரமுத்துவைப் போல, பூஜை செய்கிறார். அய்யர், அய்யங்கார் வெளியே கை கட்டிநிற்கிறார்கள். அதைப் போன்று நினைவுச் சின்னத்தை அமைத்துள்ளனர்.காலம் காலமாக இருந்த மூட நம்பிக்கையை, தொட்டால் தீட்டு என்பதை ஒழிப்பதுசாதாரணம் இல்லை. இதனை ஒழிக்க நம்மை நாமே அர்ப்பணித்தாலும் ஒழிக்கமுடியாது. அந்தத் துணிவைப் பெற்று பெரியார் நமக்கு ஊட்டியதால்தான் இதனைசெய்ய முடிந்தது.
பெரியார் இன்னும் இருப்பதால்தான் இந்த ஆணையை பிறப்பிக்க முடிந்தது.
இதைக் கண்டு அலறும் கூட்டத்தைக் காண முடிகிறது. எதிர்ப்பு அங்கும் இங்குமாகதலை காட்டினாலும் அது நிரந்தரமான எதிர்ப்பு அல்ல, நிலையானவை அல்ல. எப்படிவந்ததோ, அப்படியே சென்று விடும். இது கஷ்டப்பட்டுக் கிடைத்த வெற்றி அல்ல,உயிரை அர்ப்பணிக்க தயார் என்று கூறிய பின் கிடைத்த வெற்றி.
ஆரிய மாயையை ஒழிக்க தமிழ் பண்பாடு, வீரம் காக்க இந்த ஆணை அணு போலஇருக்கும். உலக யுத்தத்தை அணு குண்டு மாற்றியது போல, திராவிட இயக்கம் இந்தசாதனையை புரிந்துள்ளது.
இந்த அணுகுண்டு எங்கள் கையில் எப்போதும் இருக்கும். தமிழ் மொழி, பண்பாடு,இனம் அழிந்து விடும் என்று யார் நினைத்தாலும் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம்என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில், கி.வீரமணி, கவிஞர் வைரத்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்உள்ளிட்ட பலரும் பேசினர்.












Click it and Unblock the Notifications