ஆட்டோ, லாரி, டாக்சி ஸ்டிரைக்-மக்கள் அவதி
சென்னை:
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், லாரிகள், டாக்சிகள்இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள்நடந்து வருகின்றன். விலை உயர்வை ரத்து செய்யக் கோரி ஆட்டோ, டாக்சிஓட்டுனர்கள் இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதேபோல லாரிகள், மின் லாரிகள், லோட் வேன்களும் இன்று வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டன. இதனால் மாநிலம் முழுவதும் சரக்கு ஏற்றி, இறக்கும் பணிகள்முழுமையாக பாதிக்கப்பட்டன.
லாரிகள் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஓடாது. ஆட்டோ,டாக்சிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓடாது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள் இயங்காததால் சென்னை உள்ளிட்ட நகர்களில் சாலைகள் காலியாககாணப்படுகின்றன. சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் ஆட்டோக்கள் இல்லாமல் மக்கள் அல்லாடினர்.
வழக்கமாக ஆட்டோக்களில் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளும் ஆட்டோக்கள்இல்லாமல் சிரமத்துக்கு உள்ளாயினர். ஷேர் ஆட்டோக்களும் போராட்டத்தில்பங்கேற்றதால் மக்கள் பஸ்களையே சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.இதனால் பஸ்களிலும் புற நகர் மின்சார ரயில்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல்இருந்தது
லாரிகள் இயங்காததால் நெடுஞ்சாலைகளும் மார்க்கெட் பகுதிகளும் வெறிச்சோடிக்கிடக்கின்றன. லாரிப் போக்குவரத்து நிறைந்த மூல கொத்தளம், வால்டாக்ஸ் ரோடு,கோயம்பேடு ஆகிய பகுதிகள் லாரிகள் இன்றி காலியாகக் காட்சியளித்தன.
இந்த ஸ்டிரைக்கால் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள லட்சக்கணக்கான முட்டைகள்தேக்கமடைந்துள்ளன. அதே போல திருப்பூர், கோவை பகுதியில் இருந்து நூல், துணிமணிகள் ஏற்றுமதியும்பாதிக்கப்பட்டுள்ளது.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் போராட்டத்தால் சென்னைக்கு மிகக் குறைந்த அளவிலேயே காய்கறிகள்வந்திறங்கின. இதனால் சில நாட்களுக்கு காய்கறி விலை தாறுமாறாக உயரும் வாய்ப்புள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications