ஆட்டோ டிரைவர்களுக்கு கம்யூ தொண்டர்கள் உதை
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் இன்று நடத்தியஆர்ப்பாட்டத்தின்போது, ஆட்டோ ஓட்டிச் சென்ற டிரைவர்கள் மீது கடும் தாக்குதல்நடத்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று இடது சாரிக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை ஏ.ஜி. அலுவலகம் அருகே பெரும்திரளாக கூடிய மார்க்சிஸ்ட் கட்சியினர் விலை உயர்வை எதிர்த்துக் கோஷமிட்டனர்.சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று நடக்கும் ஆட்டோ வேலைநிறுத்தத்தில் பங்கு கொள்ளாமல்ஆட்டோக்களை ஓட்டி வந்த இரண்டு ஆட்டோக்களை கம்யூனிஸ்ட் தொண்டர்கள்வழிமறித்து ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர்.
பின்னர் ஆட்டோ டிரைவர்களையும் கடுமையாக தாக்கினர். போலீஸார் தலையிட்டுஆட்டோ டிரைவர்களை கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் ஆவேசத்தாக்குதலிலிருந்து மீட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கராஜன் உள்ளிட்டோர்கலந்து கொண்டு பேசினர். பூக்கடை தபால் நிலையம் எதிரே நடந்த போராட்டத்தில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டார்.
திருச்சியில் நடந்த போராட்டத்தில் நல்லகண்ணுவும், மதுரை போராட்டத்தில்தா.பாண்டியனும் பங்கேற்றனர்.
காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களிலும் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.நாகையில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமையிலும், புதுக்கோட்டையில்இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜசேகரன் தலைமையிலும் போராட்டங்கள்நடத்தப்பட்டன.
எம்பியின் சட்டை கிழிப்பு:
முன்னதாக சென்னை தேனாம்பேட்டை ஏ.ஜி. அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு ரங்கராஜன் பேசுகையில், மக்கள் நலனைக் காக்க நாங்கள் இந்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறோம். ஆனால் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள்அரசியலுக்காக போராட்டம் நடத்துகின்றன.
பெட்ரோல், டீசல விலை உயர்வு மக்களை மிகவும் பாதித்துள்ளது.இதைத் தவிர்க்கசில ஆலோசனைகளை இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்தன. ஆனால் மத்திய அரசுஅதை ஏற்கவில்லை. எனவே மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக இந்தப்போராட்டத்தை நடத்துகிறோம். கோரிக்கை ஏற்கப்படும் வரை நாங்கள்போராடுவோம் என்றார் ரங்கராஜன்.
பூக்கடை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டுபேசிய இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜா பேசுகையில், இதுஉணர்வுப்பூர்வமான போராட்டம். மக்கள் நலனைக் காக்கவும், மக்களுக்கு வரிச்சுமையை ஏற்படுத்தக் கூடாது என்று அரசைக் கேட்டுக் கொள்ளவும்இப்போராட்டத்தை நடத்துகிறோம்.
ஏற்கனவே நாங்கள் கொடுத்த ஆலோசனைகளை ஏற்காமல் விலையைஉயர்த்தியுள்ளது மத்திய அரசு. சுங்க வரி, கலால் வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல்விலையை கட்டுப்படுத்தியிருக்கலாம். எங்களது போராட்டத்தை ஏற்று மத்திய அரசுவிலை உயர்வை கைவிட வேண்டும்.
விலை உயர்வு ரத்து செய்யப்படாவிட்டால், எங்களது போராட்டம் தொடரும. சிறைநிரப்பும் போராட்டத்தையும் நடத்துவோம். எங்களது போராட்டத்தை மத்திய அரசுபுரிந்து கொள்ளும் என்றார் ராஜா.
போராட்டத்தில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்ட அனைவரும் ராயபுரத்தில் உள்ளகல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் பெண்கள் பாடைஊர்வலம் நடத்தினர். கைது செய்யப்பட்டவர்களில் 300 பேர் பெண்கள்.
இதேபோல தமிழகம் ழுவதும் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான இந்தியகம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களைப் போலீஸார்கைது செய்தனர்.
நாகர்கோவிலில், தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.பெல்லார்மின் கைது செய்யப்பட்டார். அப்போது போலீஸாருக்கும், கட்சியினருக்கும்இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எம்.பி. பெல்லார்மினின் சட்டை கிழிந்தது.அதை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றபோது அவர்களைபோலீஸார் தடுத்ததால் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலபத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications