கால்பந்து: ஆஸ்திரேலியா- செக் அணிகள் வெற்றி
ஜெல்சன்கிர்சன்:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்காவும், செக் குடியரசும் மோதின. இதில் 3-0 என்ற கோல்கணக்கில் செக் குடியரசு வெற்றி பெற்றது.
செக் குடியரசு ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் ஜான் கோலர் தனது தலையால்முதல் கோலை போட்டு அசத்தினர்.
பின்னர் அமெரிக்க கேப்டன் கிளாடிய ரெய்னா ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் 25 மீட்டர் தூரத்தில் இருந்துஷாட் அடித்தார். அந்த பந்து கோல் போஸ்டில் பட்டு விலகிச் சென்றது. இதனால் கோல் பெறும் வாய்ப்பு அந்தஅணிக்குக் கிடைக்கவில்லை.
பிறகு செக் குடியரசின் தாமஸ் ரோசிக்கி ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் 25 மீட்டர் தூரத்தில் இருந்துஅருமையான ஒரு கோல் அடித்தார். இதனால் செக் குடியரசு 2-0 என்ற முன்னிலை பெற்றது.
![]() |
பின்னர் இரண்டாவது பாதியில் மீண்டும் தாமஸ் ரோசிக்கி மற்றொரு அருமையான கோல் அடித்தார். இதனால்செக் குடியரசு 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும்கோல் எதுவும் போடவில்லை.
இதனால் செக் குடியரசு 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கைசர்ஸ்லைடர்ன்சில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கால்பந்து தொடரின் முதல் முதலாக விளையாடியஆஸ்திரேலியா, ஜப்பானை 3-1 என்ற கோல் கனக்கில் வென்றது. கடந்த 32 ஆண்டுகளில் உலகக் கால்பந்துபோட்டியில் ஆஸ்திரேலியா வென்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்.
இத்தாலி போராடி வெற்றி:
நள்ளிரவு நடந்த இன்னொரு ஆட்டத்தில் இ பிரிவில் இடம் பிடித்துள்ள பலம் வாய்ந்த இத்தாலியும், முதல்முதலாக களம் இறங்கிய கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியின் வீரர்களின் ஆட்டம்சிறப்பாக இருந்தது. இதனால் இத்தாலி அணி போராடி வெற்றி பெற்றது.
![]() |
கடுமையான போராட்டத்துக்கு பிறகு ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் தான் முதல் கோல் அடித்தது இத்தாலிஅணி. இந்த கோலை அட்ரியேர பிர்லோ அடித்தார்.
முதல் பாதியின் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கானாஅணியின் கோல் கீப்பர் கிங்ஸ்டன் ரிச்சர்டு சிறப்பாக செயல்பட்டார். இவர் இத்தாலி வீரர்கள் ஆட்டத்தின் 50,66நிமிடத்தில் கோல் அடிக்க முயன்றனர். அதை சிறப்பாக பாய்ந்து தடுத்தார்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் இத்தாலி அணி 2 கோலை அடித்தது. இதை அந்த அணியின் வின்சென்சோ பேக்பாஸ் மூலம் இந்த கோலை அடித்தார். ஆட்டம் முடியும் வரை போராடியும் கானா அணி வீரர்களால் கோல்எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டம் நேர முடிவில் இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் கானா அணியைபோராடி வெற்றி பெற்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications