இலங்கை விவகாரம்: கைகோர்க்கும் ராமதாஸ்-வைகோ-திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அனைத்துத் தமிழர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன்ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

சட்டசபைத் தேர்தலுக்கு பின்னர் இந்த மூன்று தலைவர்களும் முதல் முறையாக ஈழத்தமிழர்களுக்காக கைகோர்க்கின்றனர். ராமதாஸும், திருமாவளவனும் சென்னையில்நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். வைகோ மதுரை நிகழ்ச்சியில்பங்கேற்கிறார்.

இதுதொடர்பாக அனைத்துத் தமிழர் அமைப்புகளின் கூட்டமைப்பின்ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சிங்களப் படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆளாகி,ஆயிரக்கணக்கான தமிழர்கள் தப்பிப் பிழைத்து இந்தியாவில் அகதிகளாகக் குவியத்தொடங்கியுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறுகொடுமைகளுக்கு ஆளாகி தப்பி வர வழியில்லாமல் தவிக்கின்றனர்.

இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் ஒன்றிணைந்து குரல்எழுப்ப வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. இதை வலியுறுத்தும்வகையில் வரும் வெள்ளிக்கிழமை 16ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையிலும்,மாவட்டத் தலைநகரங்களிலும் அனைத்துக் கட்சிகள், அனைத்து தமிழர் அமைப்புகள்ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

எங்களது கோரிக்கைகள்:

இலங்கைத் தமிழர் பகுதியில் உண்மை நிலவரங்களைக் கண்டறியவும், பாதிக்கப்பட்டதமிழர்களுக்கு ஆறுதல் கூறவும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டஅனைத்துக் கட்சிக் குழு ஒன்றினை உடனடியாக அனுப்ப வேண்டும்.

இந்தியப் பிரதமரை சிங்களத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசஅனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஈழத் தமிழர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசஅனுமதிக்கப்படவில்லை. இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்களின் குழுபிரதமரை சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் போராட்டத்தில்பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்தொல்.திருமாவளவன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி பொதுச்செயலாளர் ஆனைமுத்து,

மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், பெரியார் திராவிடர் கழகபொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலைஇயக்க பொதுச் செயலாளர் பொழிலன், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழர் தேசியஇயக்க பொதுச் செயலாளர் செளந்தரராஜன் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகளைச்சேர்ந்த தலைவர்கள் பங்கு கொள்கிறார்கள்.

மதுரையில் நடைபெறும் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,தமிழர் தேசிய இயக்கப் பொருளாளர் மாணிக்கம், தமிழ் தமிழர் இயக்கத் தலைவர்தியாகு மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

சேலத்தில் பெரியார் திராவிட கழகத் தலைவர் தா.செ.மணி, தமிழ்த் தேசிய கட்சிபொதுச் செயலாளர் இளமுருகனார் கலந்து கொள்கின்றனர். தஞ்சையில் தமிழ்த்தேசிய பொதுவுடமைக் கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், தமிழர் தேசிய இயக்கபொதுச் செயலாளர் முருகேசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கோவையில் பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழர்தேசிய இயக்க மாவட்டத் தலைவர் காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.சிவகங்கையில், உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் மெல்கியோர்,தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

ராமதாஸ் கோரிக்கை:

இந் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை தமிழர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலையும், பாதுகாப்பற்றதன்மையும் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அவர்கள் தமிழ்நாட்டுக்குஅகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. இதனால் அங்க என்ன நடக்கிறது என்பதை அறிந்து வர இந்தியாவில் இருந்துஅனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பிக்கள் குழுவை அனுப்பி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தக் குழு இலங்கை சென்று அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் அவர்களின் நிலைமையை ஆராய்ந்து, அவர்கள் எத்தகைய தீர்வை விரும்புகிறார்கள்என்பதை கேட்டறிய வேண்டும்.

அதே போல இலங்கை நாடாளுமன்றத்தில் இடம் பிடித்துள்ள தமிழர்கள் பிரிதிநிதி குழு இங்கு வந்த இந்திய தலைவர்களைச் சந்தித்து பேச அனுமதிக்க

வேண்டும்.இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழர்களின் உரிமைப் பிரச்னையில் எல்லா ஆட்சியாளர்களின் பார்வையும் ஒரே விதமாகத்தான் இருக்கிறது. அத்துடன்இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நட்பு நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வங்கதேசப் போரின் போது இலங்கை எதிரி நாட்டுக்கு உதவியதை கவனத்தில் கொள்ள வேண்டும். அங்குள்ள தமிழர்களுக்கு தமிழகத்தில் வாழும்தமிழர்களும் மொழியால் மட்டுமின்றி உறவாலும் ஒன்றுபட்டவர்கள். இதனால் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய கடமையை இந்தியாதட்டிக்கழிக்கக் கூடாது.

நேபாளத்தில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட்டு அந்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தது போல் இலங்கை தமிழர்களின்விருப்பத்தேயும் நிறைவேற்றி வைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

பெருவாரியாக வந்து சேரும் தமிழ் அகதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தோகையையுந் அதிகரிக்க வேண்டும். தேவையில்லாமல் விசாரணை என்ற பெயரில் அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.

வைகோ அறிக்கை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்கள் விவரிக்க இயலாத துன்ப, துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். சிங்கள் அரசுஅறிவிக்கப்படாத ஒரு யுத்தத்தை தமிழர்கள் மீது நடத்தி வருகிறது. தமிழர் பகுதிகளில் தினமும் தமிழ்இளைஞர்களும் தாய்மார்களும் குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர்.

தமிழர் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்தில் கோப்பாய்என்ற இடத்தில் சிங்கள ராணுவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் சடலங்கள்புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த புதை குழிகளில் இருந்து அழுகிப் போன தமிழர்களின் சடலங்களும் எலும்புக் கூடுகளும் தோண்டிஎடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தாங்கள் செய்யும் கொடுமைகளை மூடி மறைத்துவிட்டு சமாதானப்பாதைக்கு தயாராக இருப்பதாக சிங்கள் அரசு சர்வதேச நாடுகளை ஏமாற்றும் வெளி வேடம் போடுகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனை என்று இந்தியா கை கழுவக்கூடாது-முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள தமிழர்களோடு தொப்புள் கொடி உறவுகொண்டுள்ள இலங்கை தமிழர்கள் வதைபடுவதை, ஆயிரக்கணக்கான அகதிகள் இந்தியாவுக்கு வரும் நிலையில்இந்திய அரசு இலங்கையில் சிங்கள அரசுக்கு சார்பு நிலையை மேற்கொள்வது போன்ற ஒரு தோற்றத்தைஇலங்கை அரசு தந்திரமாக ஏற்படுத்துகிறது.

இலங்கையில் உள்ள உண்மை நிலையை இலங்கைத் தமிழர்கள் படுகின்ற துன்பங்களை தமிழ் மக்களுடையேஉணர்வுகளை நேரடியாக விருபு வெறுப்பின்றி கண்டு அறிய இந்தியாவில் இருந்து அனைத்துக் கட்சிநாடாளுமன்றக் குழு அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், அது போல இலங்கையில் தமிழ்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் எம்பிக்கள் குழு இந்தியா வருவதற்கும், இந்தியப் பிரதமரையும் மத்தியஅரசின் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கும் உடனடியாக வாய்ப்பளிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம் தேதி பிற தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும்இணைந்து மாநிலம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்துகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்.மதுரையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.

தமிழ்ப் பெண்கள் கற்பழிப்பு:

இதற்கிடையே இலங்கையிலிருந்து இன்று 57 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர்.

இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதாலும், ராணுவம் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாலும் அங்கிருந்து ஏராளமானஅகதிகள் தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர்.

இன்று காலை இலங்கையின் வவுனியா, திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 18 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் அகதிகளாக வந்தனர்.அவர்களை அதிகாரிகள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கையில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் ராணுவத்தினர் பல்வேறு அக்கிரமங்களில் ஈடுபடுவதாக அகதியாக வந்ததவரத்தினம் என்பவர் தெரிவித்தார்.

தமிழர்களை ராணுவம் குறி வைத்து கொல்வதாகவும், கற்பழிப்பு, சொத்துக்களை சூறையாடுதல் ஆகியவை தினசரி சம்பவங்களாகி விட்டதாகவும் அவர்கண்ணீருடன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+