அரங்கநாயகம் குடும்பத்தோடு கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் அரங்கநிாயகம் தனதுமனைவி, மகனுடன் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
இதையடுத்து அரங்கநாயகம் தனது குடும்பத்தோடு ஆகஸ்ட் 28ம் தேதி மீண்டும்நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப் பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொள்ள நீதிபதிஉத்தரவிட்டார்.கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996 வரை நடந்த அதிமுக ஆட்சியில் கல்விஅமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம். இந்த கால கட்டத்தில் அவர் வருமானத்திற்குமீறிய வகையில் ரூ. 92 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கடந்த திமுக ஆட்சியில்வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொள்ளுமாறு அரங்கநாயகம், அவரது மனைவிகலைச்செல்வி, மகன்கள் முருகன் அதியமான், சந்தன பாண்டியன் ஆகியோருக்கு தனிநீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதையடுத்து இன்று அரங்கநாயகம், கலைச்செல்வி, சந்தனப்பாண்டியன் ஆகியோர்நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் அமெரிக்காவில் உள்ள முருகன்அதியமானுக்கு சம்மன் போய்ச் சேராததால் அவர் ஆஜராகவில்லை என்றுநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முருகன் அதியமானுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் அரங்கநாயகம் உள்ளிட்டநான்கு பேரும் தவறாமல் ஆஜராகி குற்றப் பத்திரிக்கை நகலைப் பெற வேண்டும்என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications