சிக்-குன்-குனியா காய்ச்சல்-10000 பேர் பாதிப்பு
சென்னை:
தமிழகத்தில் சிக்-குன்-குனியா காய்சலால் 10,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சிக்-குன்-குனியா வைரசால் ஏற்படக்கூடிய இந் நோய் கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகிறது.தலைவலி, உடல்வலி, மூட்டுவலி போன்ற அறிகுறிகள் இந்தக் காயசலின் அறிகுறிகள். 2 முதல் 5 நாட்களில்சிகிச்சைக்கு பின் இந்தக் காய்ச்சல் சரியாகி விடும்.
இதுவரை இந் நோயால் 17 மாவட்டங்களில் 10,908 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
கடந்த மார்ச் மாதத்தில் வேலூர், திருவள்ளூரில் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டது. இப்போது திருப்பத்தூர்,சைதாப்பேட்டை, திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், சிவகாசி, திண்டுக்கல், ராமநாதபுரம்,சங்கரன்கோவில், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு, தாராபுரம், அறந்தாங்கி,நாமக்கல், கோவில்பட்டி போன்ற சுகாதார மாவட்டங்களிலும் இந் நோய் பரவியுள்ளது.
இந்த நோயினால் குழந்தைகளைவிட பெரியவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோயை கட்டுப்படுத்தவும் கொசு உற்பத்தியை தடுக்கவும் தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்துஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு இணை இயக்குனர் தலைமையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மண்டல பூச்சியியல் வல்லுனர் குழு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசுக்களை அழிக்க தடுப்பு நடவடிக்கைகளைமுழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றனர்.
நோய் பரவாத 12 மாவட்டங்களிலும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுவருகிறது என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்து துறை தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications