ஜெ பழம் உரித்தது எப்படி?-விளக்கும் ஸ்டாலின்
சென்னை:
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கைக்கு அவரது பாணியிலேயே சூடான பதிலடிகொடுத்துள்ளார் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை:கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பழத்தைஉரித்துக் கொடுத்து விட்டேன், சாப்பிட வேண்டியதுதான் பாக்கி என்று ஒரு அறிக்கைகொடுத்துள்ளார். அவர் எப்படியெல்லாம் பழத்தை உரித்திருக்கிறார் என்பதை விளக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது.
அந்த விவரம் வருமாறு:
ஜெயலலிதா பழத்தை எப்போது உரிக்க ஆரம்பித்தார் தெரியுமா? 2003-04ம்ஆண்டிற்கான ஜெயலலிதா ஆட்சியின் கொள்கை குறிப்பில், நாள் ஒன்றுக்கு 300மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீர் சுத்திகரிப்புநிலையத்தினை சொந்தமாக வடிவமைத்து, கட்டி, இயக்கி மாற்றுதல் அடிப்படையில்அமைத்திட முடிவு செய்யப்பட்டது.
எனவே 2003ம் ஆண்டிலேயே பழத்தை உரிக்க ஆரம்பித்த ஜெயலலிதா, அதற்குப்பிறகு ஆட்சியில் 3 ஆண்டுகள் இருந்தபோது, அதை ஏன் சாப்பிடவில்லை.?
2.5.2003, 22.9.2003ல் ஜெயலலிதா ஆட்சியில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதே,அவற்றை ஏன் ஏற்காமல் தள்ளுபடி செய்தார்கள்? அதன் பின்னர் 2004ம் ஆண்டுஜெயலலிதா அரசு மற்றொரு திட்டத்தை நடைறைப்படுத்துவதாக கூறி அந்த திட்டம்ஜூன் 2004ல் கைவிடப்பட்டதா இல்லையா?
மூன்றாவது முறையாகத்தானே 18.11.2004ல் மீண்டும் ஒப்பந்தப் புள்ளிகள்கோரப்பட்டன. 16.2.2005 அன்று நான்கு ஒப்பந்தகாரர்களிடமிருந்து 7 விலைஒப்பந்தங்கள் பெறப்பட்டன. ஒப்பந்தம் பெறப்பட்ட பிறகு பேச்சுவார்த்தையெல்லாம்நடத்தி 13.9.2005ல் மொத்தக் குடிநீர் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ஒப்பந்தத்தின்படி ஒப்பந்த நிறுவனம் 90 நாட்களுக்குள் அதாவது 11.12.2005 க்குள்நிதி இறுதி செய்திட வேண்டும். ஆனால் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவ்வாறுகால நீட்டிப்பு வழங்கி உரித்த பழத்தை கையிலே வைத்துக் கொண்டிருந்து விட்டுதற்போது சாப்பிடத் தயக்கம் ஏன் என்று ஜெயலலிதா கேட்பது எந்த வகைநகைச்சுவையோ, நாமறியோம்!
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் வராததுதான் திட்டத்திற்குக் காரணம்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா. உரித்த பழத்தை உடனே சாப்பிட வேண்டும் என்றநோக்கத்தோடு முதல்வரோ, அல்லது அமைச்சர்களோ தமிழக அரசின் சார்பாக மத்தியசுற்றுச்சூழல் அமைச்சரை சந்தித்துப் பேசியது உண்டா?
மத்திய அரசின் நிதியுதவி குறித்து நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பலமுறை பேசினாரே,அதைப் பயன்படுத்திக்கொள்ள முன்வராமல், தன்னிச்சையாக ஒரு திட்டத்தைதொடங்க முன்வந்ததன் காரணம் என்ன?
அந்தத் திட்டத்தில் உள்ள விவரங்களை பார்த்தாலே, ஜெயலலிதா உரித்த திட்டப்பழத்திலே எத்தனை சொத்தைகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிநீர் வாரியம் அவருக்கு ஒருகோப்பு அனுப்பியிருந்தது.
அதில், அடுத்த 15 ஆண்டுகளில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும் ரூ.1481.78 கோடி வருவாய் இடைவெளியை சரிக்கட்ட மத்திய அரசிடமிருந்து நிதிஉதவி கோர முதல்வரிடம், அமைச்சர்களிடம் ஆணை கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தக் கோப்புக்கு நான்கு மாதம் வரையிலும் ஜெயலலிதா பதில் சொல்லவேஇல்லை. அப்படியே கிடப்பில் போட்டு விட்டார். கையெழுத்திடவில்லை.அப்பட்டிப்பட்டவர்தான் தற்போது பழத்தை உரித்து வைத்திருக்கிறேன், சாப்பிடுங்கள்என்கிறார் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications