இலங்கை-கண்ணி வெடி தாக்குதலில் பஸ் சிதறி61 பேர் பலி-புலிகள் பகுதியில் விமான தாக்குதல்
கொழும்பு:
இலங்கையில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி 61 பேருந்து பயணிகள்பலியாயினர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளேகாரணம் என இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இதை புலிகள் வன்மையாக மறுத்துள்ளனர்.
இந் நிலையில் புலிகளின் பகுதிகள் மீது இலங்கை விமானப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.தமிழர் பகுதிகளில் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். பலஅப்பாவித் தமிழர்களை படுகொலை செய்தும், தமிழ்ப் பெண்களை கற்பழிப்பதுமாகஇலங்கை ராணுவம் அட்டூழியம் செய்து வருகிறது.
இந் நிலையில், அனுராதபுரத்தில் இருந்து கெபிட்டிகொல்லவே என்ற இடத்துக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் மிக சக்தி வாய்ந்த கண்ணி வெடியில் சிக்கி வெடித்துச் சிதறியது.
இதில் 58 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் 40 பேர்படுகாயமடைந்தனர். இன்று காலை 7.50 மணியளவில் இச் சம்பவம் நடந்தது.
காயமடைந்தவர்கள் அனுராதாபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிகவும் பலத்த காயமடைந்தவர்கள் கொழும்பு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களர்கள் ஆவர். இந்தத் தாக்குதல்இலங்கையில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு புலிகளே காரணம் என அமைச்சரும் பாதுகாப்புப் பிரிவுக்கான செய்தித் தொடர்பாளருமானகெகலியா ரம்புக்வெல்லா கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
இது ராணுவ வாகனத்துக்கு வைக்கப்பட்ட கண்ணி வெடி அல்ல. இந்தப் பாதையை ராணுவம்பயன்படுத்துவதில்லை. பொது மக்கள் பயன்படுத்தும் சாலை என்பது புலிகளுக்கு நன்றாகவே தெரியும். இந்தத்தாக்குதலில் புலிகளின் கைவரிசை இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதை அவர்கள் தான் நடத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக சர்வதேச நாடுகளுடனும், இலங்கை நிதியுதவி செய்யும் நாடுகள் மற்றும் நார்வேயுடன்இலங்கை அரசு பேசி வருகிறது. தீவிரவாதத்தை ஒழிக்க உதவுமாறு கோரியுள்ளது என்றார்.
இதை போர்த் தாக்குதலாகக் கருதுகிறீர்களா என்று கேட்டபோது, இது தீவிரவாதம். இது போர் அல்ல. அரசைப்பொறுத்தவரை நார்கே மூலம் ஒப்பந்தமான போர் நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளது. ஆனால், அதைமறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றார்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், புலிகளால் வைக்கப்பட்ட அந்தகண்ணி வெடி 10 முதல் 15 கிலோ எடை கொண்டது. பஸ் வெடித்துச் சிதறியதில் 58 பேர் சம்பவ இடத்திலும்காயமடைந்தவர்களில் 3 பேர் மருத்துவமனையிலும் பலியாயினர் என்றார்.
செய்தித் துறை அமைச்சர் அருணா பிரியதர்சனா கூறுகையில், மீண்டும் வன்முறையைத் தூண்டிவிடும் நோக்கில்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்கஅரசு எல்லா நடவடிக்கையும் எடுக்கும்.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த 4 ஆண்டுகளில் நடந்துள்ள மிகப் பெரிய தாக்குதல் இதுவே ஆகும்.
புலிகள் மறுப்பு:
இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். நார்வேதலைநகர் ஓஸ்லோவில் இருந்து புலிகளின் குழு நாடு திரும்பியுள்ள நிலையில் உடனடியாக இந்தத் தாக்குதலைநடத்தி பழியை தங்கள் மீது பழி போட முயற்சி நடந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இலங்கை விமானப் படை தாக்குதல்:
இந்தத் தாக்குதலையடுத்து புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது இலங்கை விமானப் படைவிமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications