ஜெர்மனி பாலியல் தொழிலாளர்கள் படு பிஸி
பெர்லின்:
![]() |
விளையாட்டைப் பார்க்க வந்துள்ள பலரும் பாலியல் தொழிலாளர்களை நாடி வருவதால், அவர்கள் பல ஷிப்ட் வேலை பார்க்க வேண்டியுள்ளதாம்.
பெர்லினில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது அல்ல. ஆகவே வெளிப்படையாகவே இந்த தொழில் அங்கு நடத்தி வருகின்றனர்.
பெர்லினில் 400க்கும் அதிகமான பாலியல் மையங்கள் உள்ளன. இதில் 8,000 பெண்கள் ஈடுபட்டுள்ளனர். உலக கோப்பை போட்டிகளை பார்க்கஇதுவரை சுமார் 1 லட்சம் பேர் வரை வந்திறங்கியுள்ளனர். இவர்களால் டாக்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக டிமாண்டில் இருப்பது இந்த பாலியல்தொழிலாளர்கள் தான்.
கூட்டத்தை சமாளிக்க முடியாததால் வேலை நேரத்தை பல பாலியல் மையங்கள் நீட்டித்துள்ளன. பாலியல் தொழிலாளர்கள் இதுவரை பார்த்ததை விட அதிகநேரம் வேலை செய்கிறார்கள். டபுள் ஷிப்ட் வேலை பார்த்து பணம் ஈட்டி வருகின்றனர்.
உலகக் கோப்பை போட்டிகள் முடியும் வரை பல விஜபிக்கள் இங்கு முன் பதிவு செய்துள்ளனர் என்கிறார் ஒரு பாலியல் மைய பெண் நிர்வாகி.
இப்போ நம்ம ஊரு நியூஸ்...
நிரோத் வாங்குவது பாவம் அல்ல:
இதற்கிடையே ஊரக கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு சங்கம் மற்றும் ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி ஆகியவை இணைந்து ஒஹாட்டல்தொழிலாளர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கை, சென்னே கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய கலையரங்கில் நடத்தியது.
இதில் ஏராளமான ஹோட்டல் ஊழியர்கள், அரவாணிகள் கலந்து கொண்டனர்
![]() |
| கூட்டத்தில் கலந்து கொண்ட அரவாணிகளில் சிலர் |
நிகழ்ச்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலர் சுப்புராஜ் பேசியதாவது.
உலக மக்கள் தொகையில் 1.1 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது. இந்தியாவில் 51.34 லட்சம் பேருக்கு எய்டஸ் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்3,00,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ் நோயாளிகளால் அவரை சார்ந்துள்ள குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் துன்பத்தைஅனுபவிக்கின்றனர்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் எய்ட்ஸ் நோய் அதிகம் யாருக்கு வருகிறது என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஹோட்டல்தொழிலாளர்கள் 1.7 சதவீதம், ஓட்டுனர்கள் 1.4 சதவீதம், வியாபாரிகள் 1.3 சதவீதம் போர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஹோட்டலில் வேலை செய்வோர் பெரும்பாலும் வீட்டில் சண்டை போட்டு வந்தவர்களாக உள்ளனர். அங்கேயே தங்கி, சாப்பிடுகின்றனர். அவர்களுக்குநிறைய வேலை, தனிமை, அலுப்பு காரணமாக பாதிப்பு ஏற்பட்டு தவறு செய்ய தோன்றுகிறது.
அதனால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஹோட்டல் ஊழியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.நல்வாழ்வுத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில்,
எய்ட்ஸ் நோய் வரும் என்று தெரிந்தே பல பேர் தவறு செய்கின்றனர். கணவனுக்கு எய்ட்ஸ் இருப்பதை மனைவியிடம் மறைத்து உறவு கொள்கின்றனர்.அரசும், சந்தோஷமாக இருங்கள். ஆனால், பாதுகாப்பாகவும் இருங்கள் என்று தான் கூறுகிறது.
பெட்டி கடைகளில் கூட நிரோத் விற்கப்படுகிறது. அதை வாங்கினால் ஏதோ பாவம், தவறு என்று நினைக்கின்றனர். அந்த மனோபாவம் மாறி,எய்ட்ஸ் நோயில் இருந்து காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றார்.














Click it and Unblock the Notifications