கடத்தப்பட்ட தொழிலதிபர் மனைவி தப்பினார்-குற்றவாளியை காட்டி கொடுத்த கல்யாண கேசட்
கடலூர்:
போலீஸார் என்று கூறி நகைக் கடை அதிபரின் மனைவியைக் கடத்த முயன்றவாலிபர்களை போலீஸார் அவர்களது கல்யாண கேசட் துணையுடன் கண்டுபிடித்து,ஒருவரைக் கைது செய்தனர்.
கடலூரில் வள்ளிவிலாஸ் என்ற பெயரில் நகைக் கடை வைத்திருப்பவர் சுப்பராயசெட்டியார். இவரது மனைவி சகுந்தலா (65). இவர் தனது காரில் புதுவையில் இருந்துகடலூருக்கு நள்ளிரவில் வந்து கொண்டிருந்தார். காரை ராமலிங்கம் என்பவர் ஓட்டிவந்தார்.கார், வண்டிபாளையம் என்ற இடத்தில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவாலிபர்கள் காரை மறித்தனர். தங்களை போலீஸார் என்று கூறிக் கொண்ட இருவரும்,காரை சோதனையிட வேண்டும் என்று கூறி காரைத் திறந்து கொண்டு உள்ளேவந்தனர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு வண்டியை கொண்டு போவதாக கூறி காரை ஓட்டத்தொடங்கினர்.
அவர்கள் மீது சந்தேகமடைந்த சகுந்தலாவும், ராமலிங்கம் ஓடும் காரிலிருந்துதுணிச்சலாக வெளியே குதித்துத் தப்பினர். நேராக ரெட்டி சாவடி காவல்நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தனர். போலீஸார் உடனடியாக நடவடிக்கையில்இறங்கினர்.
அந்த நபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி அதைசோதனையிட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு கல்யாண கேசட் இருந்தது.
அதை போலீஸார் போட்டுப் பார்த்தனர். அப்போது அதில் இருந்த ஒரு நபரைசகுந்தலாவும், ராமலிங்கமும் அடையாளம் காட்டினர். இதைத் தொடர்ந்து அந்த நபரைபோலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
அவரது பெயர் ஹரி என்ற பாலன். நல்லவாடி பகுதியைச் சேர்ந்தவர். அந்தநபரிடமிருந்து காரையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாகி விட்ட இன்னொருநபரையும் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications