சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 5 நீதிபதிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மொத்தம் 49 நீதிபதிபணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 38 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.11 இடங்கள் காலியாக உள்ளன.இந்தக் காலி இடங்களை நிரப்ப 9 பெயர் கொண்ட பட்டியலை சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி, அரசுக்கு அனுப்பினார்.
இதில் 5 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலுக்குஉச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
விரைவில் 5 நீதிபதிகளின் பணி நியமனம் தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்என்று தெரிகிறது. புதிதாக நியமிக்கப்படவுள்ள நீதிபதிகள் விவரம்: எஸ்.மணிக்குமார்,கே.சந்துரு, ராமசுப்ரமணியம், வெங்கட்ராமன். இவர்கள் நான்கு பேரும் தற்போதுவழக்கறிஞர்களாக உள்ளவர்கள்.
இதில் மணிக்குமார் மத்திய அரசின் சீனியர் வழக்கறிஞராக உள்ளார். 5வது நீதிபதிசெல்வம். இவர் சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பு அதிகாரியாக உள்ளார்.












Click it and Unblock the Notifications