தமிழர் பகுதிகளில் இலங்கை விமானப் படை, ராணுவம் தொடர்ந்து தாக்குதல்
கிளிநொச்சி:
நேற்றைய கண்ணி வெடித் தாக்குதலையடுத்து இலங்கைத் தமிழர் பகுதிகளில் விமானப் படையினரும்ராணுவத்தினரும் தொடர்ந்து இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதில் பல தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது.இதில் சுனாமி நிவாரண முகாம்களும் தப்பவில்லை. ஆனால், நிவாரண முகாம்களை நோக்கி வீசப்பட்டகுண்டுகள் தவறிப் போய் தூரத்தில் விழுந்ததால் அங்கிருந்த தமிழர்கள் தப்பினர்.
இதையடுத்து நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த சமூக சேவகர்களும் பதுங்கு குழிகளுக்குள் ஓடித் தப்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புலிகளின் விமான ஓடுதளம் மீதும் விமானப் படைகள் குண்டு வீசின. நேற்று மட்டும் கிளிநொச்சியில் 12குண்டுகள் வீசப்பட்டன. அதே போல மட்டக்களப்பில் தரவாய், புலிப்பயந்தாங்கல் ஆகிய பகுதிகள் மீதும்விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்தப் பகுதிகளில் 4 குண்டுகள் விழுந்தன.
இதைத் தவிர இலங்கை ராணுவம், மட்டக்களப்பில் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. திரிகோணமலையில்ராணுவத்தினர் தொடர்ந்து ஆர்டிலரி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதில் பல வீடுகள் சேதமடைந்தன.
இதற்கிடையே யாழ்பாணத்தில் அடையாள தெரியாத சிலர் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் இரண்டுராணுவத்தினரும் ஒரு போலீஸ்காரரும் பலியாயினர்.
அமெரிக்கா, ஜப்பான், சுவிஸ் கடும் கண்டனம்:
இந் நிலையில் நேற்று நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் 64 பஸ் பயணிகள் பலியானதற்கு அமெரிக்கா, ஜப்பான்,சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று கூறியுள்ள அமெரிக்கா, இதன் மூலம் போர் நிறுத்தஒப்பந்தத்தை புலிகள் மீறியுள்ளதாகவும், உடனடியாக வன்முறையை அந்த இயக்கம் கைவிட வேண்டும் என்றும்கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications