கடத்தப்பட்ட நகை கடை அதிபர் அதிரடி மீட்பு!
சேலம்:
ரூ. 1 கோடி பணம் கேட்டு சேலத்திலிருந்து கடத்தப்பட்ட சென்னை நகைக் கடைஅதிபர் ராமாநாத் ஜெயின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் ராமாநாத் ஜெயின். 55 வயதாகும் ஜெயின், சென்னையில்நகைக் கடை வைத்துள்ளார். கடந்த 12ம் தேதி இவர் சேலம் வந்தார். அப்போது ஒருகும்பல் ஜெயினைக் கடத்திச் சென்றது. அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 1கோடி பணம் தரவேண்டும் என்று ஜெயினின் மகனுக்கு கடத்தல்காரர்கள் போன் மூலம்தெரிவித்தனர்.இதையடுத்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன்தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீஸார் பல்வேறு பகுதிகளிலும்பிரிந்து சென்று ஜெயினை தேடும் பணியில்இறங்கினர். இந்த வேட்டையில் கடத்தல்கும்பலைச் சேர்ந்த 6 பேர் சிக்கினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெயின் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம்குறித்துத் தெரிய வந்தது. இது கடத்தல் கும்பலுக்குத் தெரிய வந்ததால் அவர்கள்உடனடியாக தங்களது இருப்பிடத்தை மாற்றி விட்டனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து கடத்தல்காரர்கள் ஜெயினின்குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசினர். அந்த எண்ணை வைத்துகடத்தல்காரர்களின் இருப்பிடத்தை தெரிந்து கொண்ட போலீஸார் நாகை மற்றும்திருச்சி போலீஸாரை உஷார்படுத்தினர்.
தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில் கடத்தல் கும்பலைச்சேர்ந்த மேலும் 4 பேர் சிக்கினர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெயின்,சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வனப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதுதெரிய வந்தது.
இதையடுத்து போலீஸ் படை அங்கே விரைந்து சென்றது. அங்கு கடத்தல் கும்பலால்கட்டிய நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெயினை போலீஸார் மீட்டு கொண்டுவந்தனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட ஜெயினையும், கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களையும் சேலம் மாநகரகாவல்துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் முன்பு இன்றுஆஜர்படுத்தினார்.
மிகவும் நடுங்கிய நிலையில் காணப்பட்ட ஜெயின் செய்தியாளர்களிடம் தான்எப்படிக் கடத்தப்பட்டேன் என்பதை அழுதவாறு கூறினார். கார் மூலம் தன்னைகடத்தல்காரர்கள் கடத்திச் சென்றதாகவும், பல இடங்களுக்கு காரிலேயேஅலைகழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவரைக் கடத்தியது பண இரட்டிப்பு மோசடி கும்பல் என போலீசார்சந்தேகிக்கின்றனர்.
கடத்தப்பட்ட நகைக் கடை அதிபரின் பெயர், விவரத்தை போலீசார் ரகசியமாகவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது தான் அவரது விவரமே வெளியில்வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications