டிசிஎஸ்-தமிழகத்திலிருந்து 2 வாரத்தில் 2,034 பேருக்கு வேலை
சென்னை:
முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனமான டி.சி.எஸ் தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக நடத்திய கேம்பஸ்இன்டர்வியூ மூலம் 2,034 பேரை வேலைக்கு நியமித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1,546 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இத் தகவல்களை டிசிஎஸ் செயல் துணைத் தலைவர் பத்மநாபன் நிருபர்களிடம் தெரிவித்தார். அமெரிக்காவில்நியூஜெர்சியில் உள்ள அவர், வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த போட்டி:
டிசிஎஸ் நிறுவனம் தமிழகத்தில் 16 பொறியியல் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கேம்பஸ்இன்டர்வியூ நடத்தியது.
அவற்றில், கோவை பிஎஸ்ஜி தொழில் நுட்பக் கல்லுரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை இன்ஸ்டிடியூட்ஆப் டெக்னாலஜி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஜடி) ஆகிய இடங்களில் 1,546 பேர் பணிக்குத்தேர்ந்தெடுக்கபபட்டுள்ளனர்.
விஜடி நிறுவனத்திலிருந்து மட்டும் 525 பேர், பணிக்கான உத்தரவைப் பெற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து தான்திறமையான பொறியாளர்கள் அதிகமானோர் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
இந்த ஆண்டில் நாடு முழுவதும் இருந்து மொத்தம் 30,000 பேரைப் பணியில் நியமிக்க டிசிஎஸ்திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு 22,000 பேரைப் பணியில் அமர்த்தப்பட்டனர். தமிழகத்திலிருந்து 15,000 பேரும்,சென்னையிலிருந்து மட்டும் 7,500 பேரும் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர்.
டிசிஎஸ் அதிக ஊதியத்துடன் பணியாளர்களை நியமிக்கிறது. கடந்த ஆண்டை விட 10 சதவீதம் கூடுதலாக இந்தஆண்டு ஊதியம் அளிக்கப்படும்.
கடந்த சில வாரங்களில் நடைபெற்ற நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணி நியமன உத்தரவுபெற்றவர்கள் இறுதியாண்டில் படிப்பவர்கள் என்பதால், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறுவனத்தில் இணைந்துபணியைத் தொடங்குவார்கள்.
மேலும் பல்வேறு கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தப்படும். டிசிஎஸ்சில் வெளிநாட்டினரும் பணியில்நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4,500 பேர் நியமிக்கப்பட்டுவிட்டனர்.இதில் அமெரிக்கர்கள் 1,000 பேர் என்றார்.
இன்போசிஸ் வேலைவாய்ப்பு முகாம்:
இதற்கிடையே, பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் முகாமில் இன்போசிஸ்நிறுவனம் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் இந்த முகாமை துணைவேந்தர் டி.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.
பல்கலைக்கழகத்தின் கல்வி நிறுவன தொழில் உறவு மையம் ஏற்பாடு செய்துள்ள இந்த முகாமில் இன்போசிஸ் நிறுவனம் பணியாளர்களைத்தேர்ந்தெடுக்கிறது.
இதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. இதில் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏசி தொழிநுட்பக் கல்லூரி, கட்டடக் கலைக் கல்லூரி, கரோம்பேட்டைஎம்ஜடி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த பட்டப் படிப்பு மாணவர்கள் 1,400 பேர், பட்டமேற்படிப்பு மாணவர்கள் 1,100 பேர் பங்கேற்றனர்.
எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவோர் இன்று நடைபெறும் நேர்காணலில் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு முதல் கட்டமாக 45 நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துகின்றன. தொடர்ந்து மேலும் பல நிறுவனங்கள் வரவுள்ளன.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணி வாய்ப்பு குறித்து அதன் துணைத் தலைவர் சிவசங்கர் கூறுகையில்,
இன்போசிஸ் நிறுவனம் நாடு முழுவதும் மொத்தம் 25,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின்
தேவைக்கு ஏற்ப மாணவர்களைத் தாயார்ப்படுத்தி வளாக இணைப்புத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதில் சேருவது தொடர்பாக சுமார் 40 கல்லூரிகளுடன்பேசப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் தேவையை அறிந்து அதற்கெற்ப பாடத் திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகமும்இத்திட்டத்தில் இணைய வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications