பஸ் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ்!
திருச்சி:
தீபாவளி திருநாளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீதபோனஸ் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறைஅமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.
திருச்சியில் டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கியதற்காக முதல்வர் கருணாநிதிக்குபாராட்டு தெரிவித்து அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாநாடு நடந்தது. அதில்கலந்து கொண்டு கே.என். நேரு பேசுகையில்,அரசு அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி உறுதியாகஇருக்கிறார். நீங்கள் எதைக் கேட்டாலும் அவர் கொடுப்பார். கேட்காவிட்டாலும்அதைக் கொடுப்பார்.
கடந்த 7 ஆண்டுகளாக புதிய பேருந்துகள் விடப்படவில்லை. தற்போது 1000 புதியபேருந்துகளை வாங்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 200 கோடியைகருணாநிதியிடம் கேட்டுள்ளோம்.
கடந்த ஆட்சியில் 8.33 சதவீத போனஸ்தான் வழங்கப்பட்டது. தேர்தல் வந்ததால்கடந்த ஆண்டு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டதாக அப்போது முதல்வரிடம்எடுத்துரைத்தோம். அதேக் கேட்ட அவர் இந்த ஆண்டும் அதே 20 சதவீத போனஸைவழங்க முயற்சியுங்கள் என்று என்னிடம் தெரிவித்தார்.
முதல்வரின் உத்தரவுப்படி இந்த ஆண்டும் 20 சதவீத போனஸை வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும். புதிய பேருந்துகள் வாங்க 100 கோடி நிதியை ஒதுக்கிஉத்தரவிட்டுள்ளார் என்றார் நேரு.












Click it and Unblock the Notifications