தயாநிதி மாறன் பெயரைச் சொல்லி பல லட்சம் மோசடி!
மதுரை:
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் நேர்க உதவியாளர் என்று கூறி பெங்களூரைச்சேர்ந்த சுரேஷ் என்பவர் மதுரையில் பலரிடம் பல லட்சம் பணத்தை மோசடிசெய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற ரமேஷ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்புமதுரைக்கு குடும்பத்துடன் வந்து குடியேறினார்.தன்னை அமைச்சர் தயாநிதி மாறனின் நேர்க உதவியாளர் என்று கூறிக் கொண்டசுரேஷ் இதற்கு ஆதாரமாக தயாநிதி மாறனுடன் எடுத்துக் கொண்ட ஒரு படத்தையும்தனது வீட்டில் பெரிதாக மாட்டியுள்ளார்.
இப்படத்தை கையிலும் வைத்துக் கொண்டு தன்னை சந்திக்கும் நபர்களிடம் எல்லாம்காட்டி வந்துள்ளார். மதுரையில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பது தொடர்பானபூர்வாங்க ஆய்வுப் பணிக்காக மதுரை வந்துள்ளதாக கூறிக் கொண்ட சுரேஷ்,டிராவல்ஸ் அதிபர் சிவபாதநம்பி என்பவரை அணுகியுள்ளார்.
அவரிடம் நைச்சியமாக பேசி விலை உயர்ந்த காரை எடுத்துக் கொண்டு பலஊர்களுக்கும் போய் வந்துள்ளார். பின்னர் தனக்கு 32 கார்கள் தேவைப்படும் என்றும்அதற்கான பணத்தைமொத்தமாக கொடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து சிவபாதநம்பிக்கு பெரும் தொகை வரப் போகிறது என்ற சந்தோஷம்ஏற்பட்டது. இதை பயன்படுத்தி அவரிடமிருந்து ரூ. 10 லட்சம் பணத்தை கடனாகப்பெற்றுள்ளார் சுரேஷ். பணத்தை வாங்கிக் கொண்ட பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார்.
அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர். சிவபாத நம்பியைப் போலமேலும் பலரிடம் இப்படி பல லட்சம் பணத்தை சுரேஷ் ஏமாற்றியுள்ளது தற்போதுதெரிய வந்துள்ளது.
பணத்தைப் பறிகொடுத்து ஏமாந்த சிவபாதநம்பி உள்ளிட்ட பலரும் மதுரை மாநகரகாவல்துறை ஆணையர் சிதம்பரசுவாமியிடம் புகார் கொடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications