சரத் காலி செய்த ராஜ்யசபா சீட்டுக்குஜூலை 13ல் இடைத் தேர்தல்-இ.கம்யூ போட்டி?
சென்னை:
நடிகர் சரத்குமார் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள ராஜ்யசபா எம்.பி. பதவிக்குஜூலை 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் இருந்து விலகிய சரத்குமார், தனது ராஜ்யசபா எம்.பி. பதவியையும்இழுத்தடித்து ராஜினாமா செய்தார். இதையடுத்து அப்பதவி காலியானது.அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நிறைவடைவதாகஇருந்தது. அதற்கு முன்பாகவே அவர் ராஜினாமா செய்து விட்டதால் அந்த இடத்திற்குஇடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜூலை 13ம் தேதி இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
ஜூன் 26ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்யகடைசி நாள் ஜூலை 3.
போட்டி இருந்தால் ஜூலை 13ம் தேதி காலை வாக்குப்பதிவு நடக்கும். அன்றுமாலையே முடிவு அறிவிக்கப்படும்.
சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10இடங்களை மட்டுமே திமுக ஒதுக்கியது. இதனால் அக்கட்சி அதிருப்தி அடைந்தது.
இதையடுத்து அக்கட்சியை சமாதானப்படுத்தும் பொருட்டு ராஜ்யசபா தேர்தலில் சீட்தரப்படும் என திமுக உறுதியளித்திருந்தது.
அதன்படி தற்போது நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குசீட் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.அடுத்த ஆண்டு 24ம் தேதி வரை மட்டுமே பதவி வகிக்க முடியும்.
எனவே ஒரு ஆண்டு மட்டுமே பதவி வகிக்கக் கூடிய இப்பதவியை இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஏற்குமா என்று தெரியவில்லை.
ராஜ்யசபா எம்.பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற குறைந்தபட்சம்33 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது திமுகவுக்கு சட்டசபையில் 94உறுப்பினர்கள் இருப்பதால் நிறுத்தப்படும் வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications