தேசிய அளவில் 3வது அணி: ஜெயா தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேசிய அளவில் 3வது அணியை உருவாக்க முயற்சி நடந்து வருவதாகவும், அதன்ஒரு கட்டமாக சில தலைவர்கள் என்னுடனும் பேசியுள்ளனர் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்குஜெயலலிதா இன்று வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தேசிய அளவில் 3வது அணி அமைக்கும் முயற்சிகள் வரவேற்புக்குரியது. இந்தஅணியில் இணைவது தொடர்பாக சில முக்கியத் தலைவர்கள் என்னுடனும்பேசியுள்ளனர். அவர்கள் யார் என்பதை இப்போது சொல்ல இயலாது.

இலங்கையில் அமைதி நிலவ, தமிழர்கள் பாதுகாப்பாக வாழ இலங்கை அரசு உரியநிடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் அமைதி திரும்ப இலங்கைஅரசுக்கு இந்தியா உதவ வேண்டும்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன.யாருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலும்சீர்குலைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தால்அவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்படும் அவல நிலை உருவாகியுள்ளது.

விலை வாசியும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசியப்பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். கட்டுமானப்பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் வேலை பாதித்து10லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக அரசின் 2 ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துவருகின்றன. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், அமைச்சர்களும் ரேஷன் அரிசியைக்கடத்தி கேரளாவுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

தீவிரவாதிகளால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை அறிந்தும், இந்த அரசுஎனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைத்து விட்டது என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+