செல்போன்- ஆபாச எஸ்எம்எஸ்-2 பேர் கைதுமாணவிகளை படம் பிடித்த ஆட்டோ டிரைவர்
பெரம்பூர்:
கால் சென்டரில் வேலை செய்யும் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய 2 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகள் ப்ரியா (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).அண்ணா சாலையில் உள்ள கால்சென்டரில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு கடந்த 2 மாதங்களாக செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ்களும், ஆபாச படங்களும் வந்த வண்ணம்இருந்தன. இரண்டு செல்போன் நம்பரிலிருந்து இந்த எஸ்எம்எஸ் வந்தன.
அந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு இனி இப்படி எஸ்எம்எஸ் அனுப்பாதீர்கள் என்று ப்ரியாகேட்டுக்கொண்டார். ஆனாலும் அவர்கள் ஆபாச எஸ்எம்எஸ அனுப்புவதை நிறுத்தவில்லை. பின்னர் அவர்களைபோலீசில் புகார் செய்யப்போவதாக ப்ரியா எச்சரித்தார்.
உடனே அவர்கள் போலீசுக்கு போனால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டுயுள்ளனர். ஆபாசஎஸ்எம்எஸ் தொல்லை தொடரவே, பயந்துபோன ப்ரியா தனது தந்தை தங்கவேலிடம் கூறினார்.
அவர் இது பற்றி கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த 2 செல்போன் எண்கள் பற்றிவிசாரித்ததில் அவை வில்லிவாக்கம் சிட்கோ நகர் விஜயகுமார்(28), அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் (28)ஆகியோருக்கு சொந்தமானவை என தெரியவந்தது.
பின்னர் அவர்களை மடக்கி பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி ஒரு பெண் போலீசை அந்த நபர்களுடன்தொடர்பு கொண்டு பேச ஏற்பாடு செய்தனர். அவர்களிடம் நைசாக பேசி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்தார்அந்த பெண் போலீஸ்.
அவர்களும் ஆசையோடு கிளம்பி அங்கு வந்தனர். மறைந்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைதுசெய்தனர். அவர்கள் ஆயிரம் விளக்கில் உள்ள கால்சென்டரில் பணிபுரிவதாகவும், ப்ரியாவுக்கு ஆபாசஎஸ்எம்எஸ் அனுப்பியது தாங்கள் தான் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இரு மென்டல்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆட்டோ டிரைவர் ரெளடித்தனம்:
இந் நிலையில் பள்ளி மாணவிகளை செல்போனில் படம் பிடித்த ஆட்டோ டிரைவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.
முன்னதாக மாணவிகளை ஆட்டோ டிரைவர் செல்போனில் படம் பிடித்ததை தட்டிக் கேட்ட மாணவர்களைஆட்டோ டிரைவர்களும் அவர்களது தோஸ்துகளான லோக்கல் ரெளடிகளும் சேர்ந்து தாக்கினர். இதைக்கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் செய்ய திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுராந்தகத்தை அடுத்த கடப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதையொட்டி ஆட்டோ ஸ்டான்ட்உள்ளது.
பள்ளி முடிந்தது செல்லும் மாணவிகளை இந்த ஆட்டோ டிரைவர்கள் கிண்டலடிப்பது வழக்கம். இந் நிலையில்ஆட்டோ டிரைவர் நாசர் உசேன் என்பவர் பிளஸ் 2 மாணவிகள் சிலரை செல்போனில் படம் எடுத்துள்ளார்.
இதை பார்த்த மதன், கபிலன், முருகன், மகேந்திரன் ஆகிய மாணவர்கள், நாசர் உசேனிடம் மாணவிகளைசெல்போனில் ஏன் படம் பிடித்தாய்? என கேட்க, தகராறு ஏற்பட்டது. இறுதியில் நாசர் உசேனிடமிருந்தசெல்போனை மாணவர்கள் பிடுக்கிச் சென்றனர்.
அடுத்த நாள் நாசர் உசேன் தனது நண்பர்கள் கணபதி, விமல், அண்ணன் ரமேஷ், விஜயகுமார் ஆகியோருடன்பள்ளிக்கு வந்தார். இந்தக் கும்பல் வகுப்பறைக்குள் நுழைந்து மதன், கபிலன், முருகன், மகேந்திரன் ஆகியோரைவெளியே இழுத்து வந்து, பள்ளி வளாகத்திலேயே அடித்து உதைத்து, செல்போனை பிடுங்கிச் சென்றனர்.
இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி சூனாம்பேடு போலீஸ் நிலைத்தில் புகார் செய்தார்.இதற்கிடையில், மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் பள்ளி முழுவதும் பரவியது. மாணவர்கள் கொந்தளித்தனர்.மாணவர்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என கோஷம் போட்டுக் கொண்டே சாலைமறியலில் ஈடுபடுவதற்காக வேகமாக வந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சூனாம்பேடு போலீசார் விரைந்து வந்தது. சாலை மறியல் செய்ய முயன்றமாணவர்களை தடுத்து நிறுத்தி, சமரசம் பேசினர். இதனால் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்த சிறிது நேரத்தில் நாசர் உசேன் கைது செய்யப்பட்டார். மேலும் கணபதி உட்பட 4 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications