ஐ.டி. துறையில் 43 லட்சம் வேலை வாய்ப்பு
டெல்லி:
தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த 4 ஆண்டுகளில் 43 லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும் என்றுநாஸ்காம் அறிக்கை தெரிவிக்கிறது.
2005-06 நிதியாண்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து நாஸ்காம்-மெக்கன்ஸி ஆகியவைஇணைந்து நடத்திய ஆய்வின் விவரம் வெளியிட்டுள்ளது. அதில்,கடந்த நிதியாண்டில் ஜ.டி. துறை மிக அபாரமான வளர்ச்சி பெற்றது தெரிய வந்துள்ளது. சாப்ட்வேர்நிறுவனங்களின் ஏற்றுமதி 33 சதவீதம் அதிகரித்து ரூ. 6 லட்சத்து 200 கோடியாக உயர்ந்தது.
2010க்குள் ஜ.டி. துறையில் 43லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜடிசேவைகளின் ஏற்றுமதி அடுத்த 4 ஆண்டுகளில் அதன் இலக்கான ரூ. 2.7 லட்சம் கோடியைத் தாண்டும் என்றுஅறிக்கை தெரிவிக்கிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருமானம் கடந்த நிதி ஆண்டில் 35.6 சதவீதம் அதிகரித்து ரூ. 50,000கோடியைத் தாண்டியுள்ளது.
டாடா கன்சல்டன்சி, விப்ரோ நிறுவனங்களின் வருமானம் ரூ. 10,000 கோடியைத் தாண்டியுள்ளது. இன்போசிஸ்வருமானம் ரூ. 9,000 கோடியை தொட்டுள்ளது. சத்யம் கம்ப்யூட்டர் வருவாய் ரூ. 4,600 கோடியாக இருந்தது.
57 முன்னணி ஜ.டி. நிறுவனங்களின் மொத்த நிகர லாபத் தொகை ரூ. 10,450 கோடி. அதில் டாடா கன்சல்டன்சி,விப்ரோ, இன்போசிஸ் ஆகியவற்றின் நிகர லாபம் ரூ. 2,000 கோடியை விட அதிகம்.
அவுட்சோர்சிங் பற்றி குறும்படம்:
இந் நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இங்கிருந்தபடியே பணிகள் செய்து தரும் அவுட்சோர்சிங்துறையை பற்றி ஒரு டாகுமென்டரி படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கால் சென்டர்களில் பணிபுரியும் பெண்களுக்கு, மேற்கத்திய பெயர் தரப்படுவது, மேற்கித்தியஆங்கில உச்சரிப்பு சொல்லித்தருவது போன்ற பல விஷயங்கள் படத்தில் உள்ளன.
பகலில் நளினி, இரவில் நான்சி என்ற அந்த படம் இம்மாதத்தில் அமெரிக்காவிலும் திரையிடப்படுகிறது.நியூயார்க், லாஸ் ஏஞ்சலீஸ், பிலடெல்பியா நகரங்களில் இது திடையிடப்படும்.
ஏற்கெனவே பல இடங்களில் இந்தப் படம் விருது பெற்றுள்ளது. 27 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தை இயக்கிஇருப்பது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான சோனாலி குலாதி.
இந்தியா வாழ்க்கையை அமெரிக்காவிலிருந்து பார்ப்பது போல படத்தில் சம்பவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவுட்சோர்சிங்கில் திரைக்கு பிந்தைய விஷயங்களையும் இப்படம் காட்டுகிறது. தாராளமயமாக்கல்,முதலாளித்துவம் போன்றவற்றின் சிக்கல்களையும் மனிதர்களின் அடையாளம் மாறுவதையும் இந்த படம்விளக்குகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications