கணவரை கொன்ற ஸ்ரீவித்யா காதலனால் கர்ப்பம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஹனிமூனுக்காக சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் அவரது மனைவி ஸ்ரீவித்யா, கள்ளக் காதலன்ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அன்பராஜூ ஆகியோர் மூணாறு அருகே உள்ள தேவிகுளம் ஜெயிலில்அடைக்கப்பட்டுள்ளனர்.

காதலன் ஆனந்துடன் மூலமாக வித்யா கர்ப்பமாக இருக்கலாம் என கேரள போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதைஉறுதி செய்வதற்காக அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனைக்காக ஸ்ரீவித்யாவை போலீஸார் மூணாறு அருகே உள்ளஅடிமாலி என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதுபொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு சரமாரியாகத் திட்டித் தீர்த்ததால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடமிருந்து ஸ்ரீவித்யாவை போலீஸார் மிகுந்தசிரமப்பட்டு மீட்டு அழைத்துச் சென்றனர்.

அடிமாலி வந்ததும் பேருந்திலிருந்து வித்யாவை போலீஸார் கீழிறக்கினர். அவரைஅடையாளம் கண்டு கொண்ட பொது மக்கள் ஸ்ரீவித்யாவை சூழ்ந்து நின்று சரமாரியாகதிட்டித் தீர்த்தனர். சிலர் அடிக்கவும் பாயந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விபரீதம் ஏதும் நடந்து விடக் கூடாது என்பதால்போலீஸார் மிகுந்த சிரமப்பட்டு வித்யாவை ஒரு ஜீப்பில் ஏற்றிக் கொண்டுஅங்கிருந்து சென்றனர். பின்னர் மருத்துவமனையில் ஸ்ரீவித்யாவுக்கு மருத்துவப்பரிசோதனை நிடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் தேவிகுளம் கிளைச் சிறையில்ஸ்ரீவித்யா அடைக்கப்பட்டார்.

Vidhaya with Anantharaman
ஹனிமூனில் கணவர் அனந்தராமனுடன் ஸ்ரீவித்யா

இதற்கிடையே ஆனந்துக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் பள்ளிப் பருவம் முதலே காதல் இருந்துள்ளது கேரள போலீஸ்விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் ஸ்ரீவித்யாவிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த விவரம்:

பள்ளியில் ஆரம்பித்து கல்லூரிக்குச் சென்ற பிறகும் வித்யா-ஆனந்த் காதல் தொடர்ந்தது. ஆனந்தை தான்திருமணம் செய்வேன் என ஸ்ரீவித்யா பிடிவாதமாக இருந்துள்ளார்.

ஆனால், திருமணத்துக்கு ஜாதி தடையாக இருந்தது. நாங்கள் பார்க்கும் பையனை திருமணம் செய்யாவிட்டால்நான் செத்து போவேன் என ஸ்ரீவித்யாவை அவரது தாயார் மிரட்டியுள்ளார்.

இந்த மிரட்டலுக்குப் பின்னரே தூரத்து உறவினரான அனந்தராமனை ஸ்ரீவித்யா திருமணம் செய்துள்ளார்.இதனால் அனந்தராமனுக்கு மனைவியின் காதல் விவகாரம் தெரிந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கிறார்கள்.

ஸ்ரீவித்யாவும், அனந்தராமனும் கேரள மாநிலம் சென்றது முதல் மூணாறில் அனந்தராமன் கொலை செய்யப்படும்வரை அந்த தம்பதியுடன் கார் டிரைவர் சாம் வின்சென்ட் இருந்துள்ளார். அனந்தராமன் தேனிலவுக்கு செல்லமுடிவெடுத்ததும், அவரது நண்பர் ஒருவர், கார் டிரைவர் சாம் வின்சென்ட்டை பரிந்துரைத்துள்ளார்.

அதன்படி சென்னையில் இருந்தே சாம் வின்சென்டுக்கு தாங்கள் வரும் விவரத்தை அன்ந்தராமன் கூறி உள்ளார்.அதன்படி புதுமணத் தம்பதிகள் சென்னையில் இருந்து திருச்சூர் வந்திறங்கியதும் அவர்களை சாம் வின்சென்ட்பிக்-அப் செய்து கெண்டு சென்றுள்ளார்.

இதையடுத்து அவரிடமும் கேரள போலீசார் விசாரித்துள்ளனர். அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,

திருச்சூருக்கு வந்த இருவரையும் நான் எனது காரில் அழைத்துச் சென்றேன். திருச்சூரில் இருந்தது குருவாயூர்சென்றோம். குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மூணாறு செல்ல வேண்டும் என்றனர்.

போகும் வழியில் அனந்தராமனும், வித்யாவும் அரட்டை அடித்துக் கொண்டே வந்தனர். ஜோக் அடித்துசிரித்தபடியே வந்தனர். இடையிடையே வித்யா தனது செல்போனில் ஆங்கிலத்தில் பேசினார். அவர் என்னபேசினார் என்று எனக்கு விளங்கவில்லை.

இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்களில் அவர்கள் 2 பேரும், போட்டோ எடுக்க சொல்லி என்னிடம் அவர்களதுடிஜிட்டல் கேமராவைத் தந்தனர். நான் தான் 2 பேரையும் படம் பிடித்தேன்.

மூணாறில் கொலை நடநத் இடத்துக்கு சற்று தொலைவில் நானும் காருடன் நின்று கொண்டு இருந்தேன்.அப்போது நான் சற்று அயர்ந்து தூங்கிவிட்டேன். அந்த சமயம்தான் வித்யா அலறி அடித்துக் கொண்டுஓடிவந்தார். எனது கணவரை 2 பேர் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர் எனகூறினார். நானும் முதலில் அதை நம்பிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Vidhaya with Anantharaman
ஹனிமூனில் கணவர் அனந்தராமனுடன் ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யாவுடன் சேர்ந்து அவரது கணவரைக் கொலை செய்து பிடிபட்டுள்ள காதலன் ஆனந்த் சென்னைஅனகாபுத்தூரை சேர்ந்தவர். அவரது தந்தை பெயர் இருதயராஜ். தயார் புஷ்பவல்லி. தங்கள் மகன் கொலைவழக்கில் சிக்கி இருப்பது இந்த குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து ஆனந்தின் இருதயராஜ் கூறியதாவது,

3 வருடத்துக்கு முன் ஸ்ரீவித்யாவை ஆனந்த் எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தான். அப்போது இது என்னுடன்பள்ளியில் படித்த தோழி என்று தான் அறிமுகப்படுத்தினான். அதன் பிறகு அடிக்கடி அழைத்து வந்தான். வித்யாஎன் மனைவியிடமும் மற்ற இரு மகன்களிடமும் அன்பாக பேசுவாள்.

அப்போது ஆனந்தை பற்றி என் மனைவியிடம் சில விஷயங்களை கேட்டு இருக்கிறாள். உங்கள் மகனுக்குஎப்போது திருமணம் செய்ய இருக்கிறீர்கள். உறவினர் வீடுகளில் பெண் இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டுஇருக்கிறாள்.

இதனால் ஸ்ரீவித்யா மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனந்தும், ஸ்ரீவித்யாவும் காதலிப்பார்களோ என்றுநினைத்தோம். இது பற்றி ஆனந்திடம் கேட்டோம். அவன் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். அவளை தான்திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டான்.

ஆனந்த, ஸ்ரீவித்யா காதல் விவகாரம் எங்களது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் தெரிய வந்தது. வித்யா இங்குஅடிக்கடி வருவது குறித்து ஒரு மாதிரியாக பேசினார்கள். எனவே வித்யாவிடம் இனி நீ எங்கள் வீட்டுக்குவரவேண்டாம் என்று கூறினோம். அதன் பிறகு அடிக்கடி வருவதை நிறுத்தி கொண்டாள். ஆனந்த் பின்னர்வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்ட ஆரம்பித்தான்.

இடையில் ஸ்ரீவித்யாவுக்கு திருமணம் நடந்து இருக்கிறது. அது கூட எங்களுக்கு தெரியாது. கடந்த 16ம் தேதிமதியம் 2 மணிக்கு ஸ்ரீவித்யா எங்கள் வீட்டுக்கு வந்தாள். சுடிதார் அணிந்திருந்த அவள் கழுத்தை துப்பட்டாவால்மூடி இருந்தாள்.

இதனால் அவள் கழுத்தில் தாலி கிடந்ததை நாங்கள் பார்க்கவில்லை. எனது மகனிடம் சிறிது நேரம் பேசி விட்டுஉடனே புறப்பட்டுச் சென்று விட்டாள். அப்போதுதான் மூணாறுக்கு சுற்றுலா செல்லும் பயண குறிப்பை எழுதிகொடுத்திருப்பாள் என்று நினைக்கிறேன்.

அன்று மாலையே ஆனந்த எங்கேயோ புறப்பட்டு சென்றான். போகும்போது அவனுடைய நண்பன்அன்பராஜையும் அழைத்து சென்றான். எந்த இடத்துக்கு செல்கிறேன் என்ற விஷயத்தை சொல்லவில்லை.

வழக்கம் போல இரவு வீட்டுக்கு வருபவன் அன்று வரவில்லை. மறுநாள் காலையும் வரவில்லை. எனவேஎங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஸ்ரீவித்யா வீட்டுக்கு வந்ததற்கும், ஆனந்த காணாமல் போனதற்கும் சம்பந்தம்இருக்கும் என நினைத்தோம்,

Vidhaya with Anantharaman
ஹனிமூனில் கணவர் அனந்தராமனுடன் ஸ்ரீவித்யா

ஒரு வேளை இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டார்களோ என்று கருதினோம். எனவேஆனந்த்துடன் செல்போனில் தொடர்வு கொண்டு பேசினேன். ஒரு திருமண வீட்டுக்கு வந்து இருப்பதாகவும் 2நாளில் வந்து விடுகிறேன் என்று கூறினான். ஆனால் அவன் இருக்கும் இடத்தை சொல்லவில்லை.

2வது நாள் ஸ்ரீவித்யா பற்றிய செய்தி பேப்பரில் வந்தது. அவர் கணவர் கொல்லப்பட்டதாக வந்த செய்தியைபார்த்த பிறகுதான் ஸ்ரீவித்யாவுக்கு திருமணம் ஆன விஷயமே எங்களுக்கு தெரிந்தது.

அடுத்த நாள் என் மகனும் சம்பந்தப்பட்டிருப்பது பற்றி செய்தி வந்திருப்பதை அதிர்ந்து விட்டோம். என் மகனைகாதலித்த ஸ்ரீவித்யா என்ன வந்தாலும் சரி என்று என் மகனையே திருமணம் செய்திருக்க வேண்டும். வேறுஒருவரை திருமணம் செய்த பிறகு ஒதுங்கி சென்றிருக்க வேண்டும்.

அதை செய்யாமல் இன்னொருவனுக்கு மனைவியாக விட்டு என் மகனையும் இப்போது சிக்கலில் மாட்டிவிட்டுஇருக்கிறாள். மொத்தத்தில் என் மகன் பலிகடா ஆகி விட்டான். எங்களால் வெளியே தலைகாட்ட முடியவில்லை.ஆனந்தை நம்பி இருந்த நாங்கள் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம் என்றார் அழுதபடியே.

இதற்கிடையே வித்யாவின் பெற்றோர் தரப்பு அவரை ஜாமீனில் எடுக்க பலவழிகளிலும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+