சோ.பா. உடல் தகனம்: தலைவர்கள் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி:

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோ.பாலகிருஷ்ணனின் உடல் இன்றுபரமக்குடியில் தகனம் செய்யப்பட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோ.பாலகிருஷ்ணன் கடந்த2004ம் ஆண்டு ராமேஸ்வரத்திலிருந்து பரமக்குடிக்கு காரில் வந்துகொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

அவரது முதுகுவடத்தில் காயம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்துமதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

வெள்ளிக்கிழமை மாலை சோ.பா.வின் உடல் நலம் மோசமடைந்ததால். அவரைசொந்த ஊரான பரமக்குடிக்குக் கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சோ.பா. பரமக்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குஅவருக்கு பிராண வாயு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சோ.பா.வின் உயிர் பிரிந்தது.இதையடுத்து அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பரமக்குடி பாரதி நகரில்உள்ள அவரது சொந்த வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.

சோ.பாவின் உடலுக்கு அனைத்து கட்சியினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார்கள். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் இன்று காலை சோ.பாவின்உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இன்று காலை இறுதி சடங்குகள் நடந்தது. அதனை தொடர்ந்து சோ.பாவின்இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் முக்கிய நகரின் வழியாக மஞ்சள்பட்டிணம்சுடுகாட்டை அடைந்தது.

அங்கு இறுதி சடங்குகள் நடந்தது. அதன் பின்னர் சிதைக்கு சோ.பாலகிருஷ்ணனின்மூத்த மகன் ஜவகர் தீ மூட்டினார்.

சோ.பாலகிருஷ்ணனின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி தெரிவிக்கும்வகையில் பரமக்குடி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+